பக்கம்:குறட்செல்வம்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. காரணம் என்ன?

இந்த உலகில் செல்வந்தர்கள் மிகச் சிலரே உள்ளனர்; வறியவர்கள் பலர். இந்த அவல நிலை ஏன்? உலகு தொடங்கிய நாள் தொட்டு, எல்லாரும் செல்வந்தர்களாக விளங்கவே விரும்புகின்றனர்; முயலுகின்றனர். சிலருக்கே வெற்றி கிடைக்கிறது. பலர் தோல்வியடைகின்றனர்.

இந்த வெற்றி - தோல்வியின் வி ைள வ க ஏற்பட்டுள்ள விளைவுகள் மனித சமுதாயத்தின் நல்வாழ்க்கைக்குக் கேடு பயப்பன ஆகும். பல்வேறு ஒழுக்கத் தவறுகளைத் தோற்றுவிப்பனவாகவும் அமைந் துள்ளன. அதனாலேயே, செல்வம் உடைய சிலரை எதிர்த்து, கிளர்ச்சிகளும், புரட்சிகளும் தோன்றின - தோன்றுகின்றன.

இந்த அவல நிலை பற்றிய ஆய்வு, இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பே திருக்குறளில் செய்யப் பெற்றுள்ளது. திருவள்ளுவர் ஒரு முற்போக்குக் கருத்துடைய கவிஞர் - பொருளியல் வல்லுநர் -நடைமுறைக்கு இயைந்த சித்தாந்தங்களைக் கண்டு சமூகச் சிக்கல்களுக்குத் தீர்வு கண்டவர். . - t.

செல்வம் உடையவராகச் சிலரும், இல்லாதவராகப் பலரும் இருப்பதற்கு, திருவள்ளுவர் காரணம் கூறுகிறார். அவர் கூறும் காரணம் புதிது - புகழுடையது. உலக அரங்கில் தோன்றிய முற்போக்குக் கருத்துக்கள் அனைத் தினும் ஆன்ற சிறப்புடையது. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/114&oldid=701864" இலிருந்து மீள்விக்கப்பட்டது