பக்கம்:குறட்செல்வம்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

நோற்பார் சிலராயின் வறியவர் பலராவர் என்று தெளிவா கக் கூறினார். . . - * : *

திருக்குறளை, கீழ்க்கண்டவாறு இணைத்துப் பொருள் கொண்டு சிந்திக்கவும். , ,

இலர்பலர் ஆகிய காரணம் நோற்பார் சிலர்பலர் கோலா தவர். . இக் குறட்பாவில், "நோற்பார் சிலர்' என்று ஒரு பகுதியும், 'பலர் நோலாதவர் இலர் பலர்’ என்றும் கொண்டு கூட்டிப் பொருள் காணுதல் சாலும். குறட்பாவில் இலர் வெளிப்படையாகச் சொல்லப் பெற்றுள்ளது. உடைமை உய்த்துணர்விக்கப் பெற்றுள்ளது. -

நோற்பார் என்றும், சிலர் என்றும் இருப்பதால், நோற்பாரை உயர்வு கருதிய ஒருமையாக ஏற்றுக்கொண்டு. பொருள் காணுதல் வேண்டும். அவ்வழி நோற்பாரும் சிலரும் ஒருவரேயல்லர்; நோற்பார் வேறு; சிலர் வேறு. நோலாதவர் வேறு; பலர் வேறு.

உலகிய்லுங்கூட ஒரு மனிதனுடைய எழுச்சிக்கும் வீழ்ச்சிக்கும் அவனைச் சார்ந்த சமுதாயம் பொறுப்புள்ளது ஆகிறது என்ற வழக்கின் அடிப்படையையும் இங்கு எண்ணிப் பார்க்க வேண்டும். . . . .”

- மேற்கண்ட உரை துறவியலில் விரும் தவம் என்ற

அதிகாரத்திற்குப் பொருந்துமோ என்ற ஐயப்பாடு

சிலருக்குத் தோன்றலாம். பொருந்தும் - முக்காலும் பொருந்தும் என்பதே நம்முடைய கருத்து. :

தவம், ஒழுக்கத்தின் முதற்படி, பொரும் பற்று நீங்கு தலேயாம். அதனால், பொருந்தும். தவமுடையார்க்குப் ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/118&oldid=1276419" இலிருந்து மீள்விக்கப்பட்டது