பக்கம்:குறட்செல்வம்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸117

பொருள் ஏது என்ற வினா எழலாம். தவமுடையார் தாமே நேரில் பொருள் ஈட்டாது போனாலும், அவர் தம் தவத்தினால் கவர்ச்சிக்கப்பட்டவர்கள் - நன்மைகளைப் பெற்றவர்கள் காணிக்கை தருவார்கள்.

அங்ங்னம், சாதாரண மக்களும் மன்னர்களும் கூடத் தந்துள்ளனர் என்பதை நமது நாட்டு வரலாறே பேசு கின்றது. அவ் வழித் தோன்றியவையே அறநிலையங் களும், திருமடங்களும். அங்ங்னம் தரும்பொழுது, அவற்றையும் வழங்கிப் பிறரை வாழ்வித்து, தான்் வறிய வராக வாழ்தலே தவத்திற்கு அழகு. - * *

இக் கருத்தினை அப்பரடிகள், "கந்தை மிகையாம் கருத்தும்' என்று பேசுகின்றார். இதனைச் சேக்கிழார் அடிகளும்,

கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்

ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார் கூடும் அன்பினால் கும்பிடலேயன்றி விடும் வேண்டார் விரலின் விளங்கினார்.' என்றும், அடுத்து

ஆரம் கண்டிகை ஆடையும் கங்தையே பாரம் ஈசன் பணியல தொன்றிலர் என்றும் குறிப்பிடுகின்றார்.

ஆதலால், தவத்தினை மேற்கொண்டவர்களாவது தமக்குக் கிடைத்த செல்வத்தைப் பிறருக்கு வழங்கி மற்றவர்தம் வறுமையை மாற்றி - அல்லல் நீக்கி - அவலம் போக்க சிவ சிந்தனையில் ஈடுபட வேண்டியது.

அவசியம். எனவே, இவ்வுரை முற்றிலும் பொருந்துவதே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/119&oldid=1276420" இலிருந்து மீள்விக்கப்பட்டது