பக்கம்:குறட்செல்வம்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸127

என்ற திருக்குறள் சிந்தனைக்குரியது. முன்னர் விளக்கி யுள்ளது போல, பொருள் வரலாம், அங்ங்னம் வருவது துறவிகளின் நலன் கருதி மட்டுமல்ல - பலர் நலன் கருதியே யாகும். ... •

ஆயினும், பலன் நலன் கருதிப் பொதுப் பணி ஆற்று வோருக்கும் துறவு நெறி மேற்கொண்டோருக்கும்கூட வாழ்க்கையுண்டு - அவர்களுக்கும் தேவையுண்டு. அத் தேவையை அவர்கள் அளவோடு அடைந்து அனுபவித்தல் தவறன்று. - ’à -

அங்ங்ணமின்றி, பொதுப் பணியின் பேரால் துறவு நிலையை முதலாகக் கொண்டு தோன்றிய பொருளைத் தவறான வழிகளிலும், தேவையற்ற ஆடம்பரங்களிலும் செலவழித்து, துய்த்தலும் - அனுபவித்தலும், அவ்வழி அச்சம் தோன்றுதலால் தன்னலம் கருதி, தனி நிதி சேர்த்து வைத்துக் கொள்ளுதலும் களவேயாகும்.

ஆதலால், பெரும் பொருள் தேடி வேண்டும் - அனுபவிக்க வேண்டும், என்ற விருப்பத்தோடு 'தவம் மறைந்து அல்லவை செய்வார் அளவின்கண் நின்றொழு கார் தம்முடைய வாழ்க்கைக்கு தேவைகளை எளிய முறையில், அளவுக்கு உட்படுத்திக் கொள்ளமாட்டார்கள். அளவிறந்த ஆடை ஆபரணங்கள் சுகபோக வசதிகள் ஆகியவற்றில் வாழ்வார்கள். அவர்கள் மகிழ்வார்கள்.

ஆனால் அந்தப் பொருளின் தோற்றம் அவர்கள் மகிழ்தற்கல்ல - பிறரை மகிழ்வித்து வாழ. பிறரை மகிழ் விக்கத் தோன்றிய பொருளில் தாம் மகிழ்தல் துறவின் பாற்பட்டதன்று. இதனையே திருக்குறள் வலியுறுத்து கின்றது. - r . -

அளவின்கண் மின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/129&oldid=1276428" இலிருந்து மீள்விக்கப்பட்டது