பக்கம்:குறட்செல்வம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

செல்வத்தின் எக்களிப்பு என்று கருதுகின்றார். அல்லது பழக்கத்தின் வழிப்பட்ட செயல் மட்டுமே என்று கருது கின்றார். அள்ளிக் கொடுத்த செயலுக்கும் நெஞ்சுக்கும் தொடர்பில்லை என்று வள்ளுவர் கருதுகின்றார்.

அங்ங்ணம் அள்ளிக் கொடுப்பதைவிட அந்த ேநாயாளி களின் நோயின் வழிப்பட்ட துன்ப அனுபவத்தை, தமதாக எண்ணி அனுபவித்து அவதிப்படுவோனை அன்பால் முழுக்காட்டுவதையே அறிவுடைமைக்கு ஏற்ற பயன்படு செயலென்று வள்ளுவர் கருதுகின்றார். இதனை,

அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய் தங்கோய்போல் போற்றாக் கடை.

என்று திருக்குறள் விளக்குகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/132&oldid=1276434" இலிருந்து மீள்விக்கப்பட்டது