பக்கம்:குறட்செல்வம்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸135

ஆன்மப் பயணத்தின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கு கிறான். . w

ஆனாலும் முன்னைய அத்தியாயத்தின் துன்பச் சார்புகள் சூழ்நிலைக்கு அமுங்கிப் போகும். நினைவிற்கு வாரா முன்னைப் பயணத்தின் பயனாகப் பெற்ற அறிவும் பண்பும் மட்டும் கைகொடுக்கும். மீண்டும் வாழ்ந்து தன்னுடைய இலட்சியப் பயணத்தை அடைகின்றான்.

ஆதலால், ஒரு மனிதன் துன்பச் சூழலில் இறப்பது குறித்து அவ்வளவாக வருந்தவேண்டிய அவசியமில்லை. அஃது அவனுக்கொரு கொடையே; இதனைத் திரு. வள்ளுவர், . -

உறங்கு வதுபோலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு. -

என்று கூறுகின்றார். அன்றாட வாழ்க்கையில் உறக்கமும் விழிப்பும் எங்ங்ணம் இயல்பாக நடைபெறுகிறதோ அது போன்ற இயல்பானதொன்று மரணமென்பது வள்ளுவர் கருத்து. இதனையே. அப்பரடிகளும், -

"துறக்கப் படாத உடலை துறந்துவெம் தூதுவரோடு இறப்பன் இறந்தால் இருவீசும் பேருவன் ஏறிவந்து

பிறப்பன் பிறந்தால் பிறையணி வார்சடைப் பிஞ்ஞகன்பேர் மறப்பன் கொலோ என்றென் உள்ளங் கிடந்து மருகிடுமே:

என்று பாடுகிறார்.

இதுபோலவே மிகப் பெரிய அளவில் தோன்றிய

உலகம், திரும்பத் திரும்ப, தோன்றுதலுக்கு இளைப் பொழித்தல் என்று மாதவச் கிவஞானமுனிவர் கூறுவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/137&oldid=1276475" இலிருந்து மீள்விக்கப்பட்டது