பக்கம்:குறட்செல்வம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41. சார்புகெடின் நோயில்லை!

உலகியற்கையின் அமைப்பு இன்பமேயாம். உலகத் தின் தோற்றம், வைப்பு, நடைமுறை ஆகிய அனைத்தும் உயிரின் பத்தினை மையமாகக் கொண்டதேயாம். ஆக இன்பமே இயற்கை. துன்பமோ செயற்கை.

ஆனால், சன்பத்தின் கர்த்தாக்களாகிய தீய மனிதர்கள் அல்-பது அறியா மாந்தர்கள் துன்பமும் இயற்கையென்றே பறைசாற்றுகின்றனர். பலர் நம்பியும் விடுகின்றனர். துன்பத்தின் தொடக்கம் பருப் பொருளிலும் அல்ல; பரந்த உலகத்திலுமல்ல.

துன்பம் மிக நுண்ணிய இடத்தில் - நுண்ணிய அளவிலேயே தோன்றி வளர்கிறது. ஆனால், தோற்றம் நுண்ணிய இடத்திலேயாயினும் அது வளர்ந்து வளர்ந்து பரந்த இடத்தைப் பிடித்து விடுகிறது.

துன்பம் ஒரு மனிதரிடத்துத் தோன்றி பல மனிதரைப் பற்றியதா? அல்லது பல மனிதரிடத்தில் ஒரே நேரத்தில் பற்றியதா? என்று ஆராய்ந்தால் ஒரு மனிதரிடத்தில் தொடங்கித்தான்் உலகில் கவிழ்ந்து மூடியது என்று அறியலாம்.

ஒரு வீட்டின் கூரையில்பட்ட நுண்ணணுப் பிரமான மான ஒரு நெருப்புப் பொறி, பல நூற்றுக்கணக்கான வீடுகளை எரித்தழிப்பதைப் போலத் துன்பமும் ஒரு முனையில் தோன்றிக் கவிந்திருக்க வேண்டும். துன்பம் காரியமேயாம், காரணமன்று.

9 سحقع

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/139&oldid=701889" இலிருந்து மீள்விக்கப்பட்டது