பக்கம்:குறட்செல்வம்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸147

இந்தக் குறளை, ‘கசடறக் கற்பவை கற்க’ என்றும் 'கசடறக் கற்க என்றும் 'கசடறக் கற்றபின் நிற்க அதற்குத் தக’’ என்றும் பிரித்துப் பொருள் கொள்ள வேண்டும். நம்முடைய மனக்குற்றம் இன்னதென்பதை அறிந்துகொண்டு அதனை நீக்குதற்குரிய நூல்களாகத் தேர்ந்தெடுத்து, கற்கவேண்டும்.

எகிப்திய நாட்டினில் பழமொழி ஒன்று உண்.ே **நல்ல நூல்கள் உயிர்க்கு மருந்து போல்வன” என்பது அது. குற்றம் நீங்குகிற வரையில் கற்கவேண்டும். குற்றம் நீங்கிய பிறகு பெற்ற புது நெறியில் நிலைத்து நின்ற ஒழுகவேண்டும் என்பதே குறளின் திரண்ட கருத்து.

இங்கனமின்றிக் 'கசடறக் கற்க' என்பதற்கு ஐயந்திரிபறக் கற்க வேண்டுமென்று பொருள் கூறுவது பொருந்துமாயினும் சிறப்புடையதாகாது.

இந்தப் பார்வையில் வெகுளியுடையவர்கள், பொறை யுடைமையை வற்புறுத்தும் நூல்களையும், கோழைமைத் தன்மையுடையவர்கள் ஆள்வினையாற்றலைத் தரும் நூல்களையும், இன்னமும் அவரவர் தம் தம் நிலை நோக்கிக் கற்க வேண்டும். இங்ங்ணம் கற்றால் தவறுகள் தொடர்ந்து வாரா.

உலகில் தனிமனித வாழ்க்கையிலும், சமுதாயப் பொது வாழ்க்கையிலும் மாறுதல்கள் நிகழும். இத்தகு சிறந்த கல்வியை வழங்கும் கல்விக்கூடம் ஒன்று திறந்தால் ஒன்பது சிறைச்சாலையை மூடலாம் என்பது ஆன்றோர் கருத்து. -

ஆனால் இன்றோ கல்வியும் பெருகி வளர்கிறது. சட்டப் புத்தகங்களும் மலைபோல் குவிகின்றன. சிறைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/149&oldid=1276484" இலிருந்து மீள்விக்கப்பட்டது