பக்கம்:குறட்செல்வம்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மொழியும் உறவும்

தமிழகத்தின் வரலாறு எவ்வளவுக்கெவ்வளவு பெரு மைப்படத் தக்கதாக அமைந்திருக்கிறதோ, அவ்வளவுக் கவ்வளவு வருத்தப்படுவதற்குரிய செய்திகளும் உள.

தமிழர்கள் கடல் நாடு என்று கருதப் பெறுதற்குரிய . இங்கிலாந்தைச் சேர்ந்த ஆங்கிலேயருக்கு முன்னோடி யாகவே கடலில் கலம் செலுத்தியவர்கள். கடல் கடந்த நாடுகளோடு வாணிகம் செய்தவர்கள்.

சிறப்பாக இந்திய கிழக்காசிய நாடுகளைத் தன்ன கத்தே கொண்ட பெருந்தமிழ்நாடு உடையவர்கள். இமயத்தின் மடியிலும், கங்கைக் கரையிலும், சிந்துநதி யின் ஒரத்திலும் தமிழர்கள் உலாவினர் - வாழ்ந்தனர் என்று வரலாறு பேசுகின்றது.

எனினும் இன்றையத் தமிழர்கள் நிலை என்ன? அந்தப் பழைய தமிழகம் எங்கு போயிற்று? தமிழர்கள் தங்களுடைய உறவு கலந்து வாழும் பண்பை வளர்த்துக் கொள்ளாமையின் காரணமாகவே, இவற்றையெல்லாம் இழந்தனர் - இழந்து கொண்டிருக்கின்றனர் - இனியும் இழப்பர்போல் தோன்றுகிறது. :

வேறுபட்ட பல்வேறு மனித இனத்தினரிடையேயும் அன்பைப் பெருக்கி உறவை வளர்ப்பது மொழியினாலாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/151&oldid=701901" இலிருந்து மீள்விக்கப்பட்டது