பக்கம்:குறட்செல்வம்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

45. ஆள் முக்கியமல்ல

மனிதர்களுக்குள் பொருளியல் சண்டைகள் வருவது போலவே, கருத்துவழிச் சண்டைகளும் தோன்றுவதுண்டு. ஒருவருடைய கருத்தைவிட இன்னொருவருடைய கருத்து உயர்ந்தது என்கிற எண்ணம் தோன்றுகிறபோதும் தன் கருத்தை மற்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சி தலைகாட்டுகிற். பொழுதும் சண்டைகள் தோன்றுகின்றன.

ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்பதனை அக் கருத்தைச் சொல்லுகின்றவர்களை வைதது மட்டும் முடிவெடுக்க முடியாது.

எந்த ஓர் இனத்திற்கும் தன்னுடைய தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பது மனித இயல்பை ஒட்டியதுதான்்; தனிந் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதும் பிறருடைய கருத்தை ஏற்றுப் போற்ற மறுப்பதும் ஒன்றல்ல.

தனித் தன்மையைக் காப்பாற்றாது போனாலும், ஒரு இனவழிப்பட்ட நாகரிகத்திற்கு - கலாச்சாரத்திற்கு அடிச்சுவடே இல்லாமற் போய்விடும். அது மட்டுமல்ல - நாடுகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவண்ணம் ஒழுக்கம், ஒழுக்கமின்மைகளிற்கூட வேறுபாடுகள் நிலவுவது இயற்கை. - - ; :

மகாபாரத கலாச்சாரத்தில் ஒருத்தி ஐவருக்கு மனைவி யாக இருக்க முடியும். அது சமுதாய ரீதியாக ஏற்றுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/154&oldid=701904" இலிருந்து மீள்விக்கப்பட்டது