பக்கம்:குறட்செல்வம்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. தன் குற்றம் நீக்கிப் பிறர் குற்றம் காண்க

அரசு பொறுப்புள்ள ஒன்று. அரசின் அதிகாரத்திற்கு 8 எல்லைகளுண்டு. ஆனால் அரசினுடைய பொறுப்புகளும் கடமைகளும் மிகப் பரந்தன. நாட்டு மக்களிடையே நல்லொழுக்கமும் நன்னெறிச் சார்பும் நிலைபெற்றிருக்கும் படி செய்யவேண்டிய பொறுப்பு அரசினுடையதேயாகும்.

அதனாலன்றோ "நன்னடை நல்குதல் வேந்தர்க்குக் கடனே' என்று புறநானூறு பேசுகிறது. நன்னடை நல்குதல் என்றால் உத்தரவுகள் மூலம் என்பது பொருளன்று. சட்டங்கள் மூலமும் அன்று. கட்டுப்பாடுகள் மூலமும் அன்று, தண்டனைகள் மூலமும் அன்று.

அரசன், தான்் வாழ்தலின் மூலம் நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை எடுத்துத் தரவேண்டும். மேலும் நாட்டில் தனிமனிதனுடைய - சமுதாயத்தினுடைய ஒழுக்கச் சார்பு நல்வாழ்க்கைக்கு அரசே பொறுப்பு.

ஒழுக்க நெறிகளைப் பற்றி உரத்துப் பேசினால் போதாது. அல்லது, தண்டனையைக் காட்டி அரசும், நரகத்தைக் காட்டி மதத் தலைவனும் மிரட்டினால் ஒழுக்கம் வளர்ந்து விடுமா என்ன? போக்குமடை கட்டாமல் அணையில் தண்ணிரைத் தேக்கினால் உடைப் பெடுப்பதைத் தவிர, வேறு வழி யென்ன?

அதுபோலவே வாழ்க்கையின் தேவைகளை பெற்று சராக வாழும் வழிவகைகளைக் காட்டாமல் - பெற துணை நிற்காமல் - அல்லலுற்று அழச் செய்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/156&oldid=701906" இலிருந்து மீள்விக்கப்பட்டது