பக்கம்:குறட்செல்வம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. பெய்யும் மழை


தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழு வாள்' என்ற திருக்குறள் இன்றைய யுகத்தில் விவாதத் திற்குரிய குறளாக இருக்கிறது. சிறந்த கற்புடைய பெண் ணுக்கு இலக்கணம் வடித்துத் தருவது இந்தக் குறள்.

ஒருவருக்கொருவர் நம்பிக்கையும் கடமைப்பாடும்

தாங்கியதே நல்வாழ்வு. இந்த உயரிய வாழ்க்கை

நெறியில் உலக மனித சமுதாயம் செல்லும் வரை இன்பமே; எந்நாளும் துன்பமில்லை. -

கணவனுக்கு மனைவி நம்பிக்கைக்குரியவளாக இருக்க வேண்டும். மனைவிக்குக் கணவன் நம்பிக்கைக்குரியவ னாக இருக்கவேண்டும். நண்பனுக்கு நண்பன் நம்பிக்கைக் குரியவனாக இருக்கவேண்டும். ஏவல் கொள்வோர்-ஏவல் செய்வோர் இவர்களுக்கிடையேயும் நம்பிக்கை நிலவ வேண்டும். х -

கடமைப்பாட்டு நெறி உயிர்ப்போடிருக்க வேண்டும். இந் நெறிமுறை பிறழும் காலங்களிலெல்லாம் மனித உலகம் துன்பத்தால் சூழப்படுகிறது. பெண்ணினத்துக் கற்பை மட்டும் பெரிதுபடுத்தியதற்குக் காரணம், பெண்ணிடத்து நம்பிக்கை மோசம் ஏற்படும்பொழுது ஏற்படும் ஏமாற்றமும் பகையும் அளவிடற்கரியதாக யிருப்பதேயாகும். - r

கு—2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/27&oldid=1276334" இலிருந்து மீள்விக்கப்பட்டது