பக்கம்:குறட்செல்வம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வித்துமிடல் வேண்டுமோ?


தமிழர் நாகரிகத்தின் மிகச் சிறந்த ஒழுக்கம் விருந்: தோம்புதல். உண்பதன்முன், தன் வீட்டு முகப்பில் உணவு அருந்த வேண்டியவர்கள் யாரேனும் உள்ளனரோ என்று. பார்த்து, அவ்வாறு, எவரேனும் இருந்தால் அவர்களை அழைத்து உண்பித்துப் பின்னர், தாம் உண்பதென்பது தமிழர்களின் விழுமிய ஒழுக்கம். விருந்தினர்கள் சுதந்திர மாக-உரிமையுடன் வந்து தங்குவதற்கு திண்ணைகள் அமைத்து வீடு கட்டுவது நமது மரபு.

திருமூலர் திருமந்திரம், "யாவர்க்கு மாம் உண்னும் போதொரு கைப்பிடி" என்று வரையறுத்து ஒதுகிறது.

விருந்தோம்பும் சால்பினர் வாழும் ஊரில் அடிக்கடி அயலூர்ச் சான்றோர் வருவர். அவ்வழிச் சிறந்த அறிஞர் கள், புலவர்கள், முனிவர்கள் ஆகியோருடைய உறவும் உள்ளக் கருத்தும் எளிதில் சமுதாயத்திற்குக் கிடைக்கும். வந்தோரை உண்பித்தலின் காரணமாக அவ்வூரின் புகழும் பரவும்.

இத்தகு சிறப்புக்களுக்குக் காரணமாகத் திகழ்கின்ற நல்லோரின் கழனிகள் தல்லோரின் உடைமைகள் உரிமை யால்'ஒருவரின் உடைமைகளாக இருப்பினும் அதன் வினை வுகள் பலருக்கும் பயன்படுவதன் காரணமாக உரிமை வானாைவிட ஊரினரே அவர்தம் உடைமைகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/38&oldid=1276338" இலிருந்து மீள்விக்கப்பட்டது