பக்கம்:குறட்செல்வம்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸37

காப்பாற்றுவதில் அக்கறை காட்டுவார்கள். அவர்களே விருந்தோம்பி வேளாண்மை செய்வோரின் நிலங்களை வளப்படுத்துவதோடு மட்டுமின்றி, விதைகளும் துரவுவார் கள். அங்கே, உடைமை உரிமை உணர்வு-இன்மை அணர்வு இரண்டுக்கும் மோதல் ஏற்படாது. துன்பம் ஏற்படாமல் ஒரு சிறந்த சமுதாய அமைப்பே கால் கொள்ளுகிறது. அதனாலேயே திருவள்ளுவர், .

ഷു മ-്പേങ്ങി ഒടtഅതേ ിത്രഃഷ மிச்சில் மிசைவான் புலம்.

என்று கேட்கின்றார். இக் கருத்தினில் நம்பிக்கையில்லா தோர் சில பேர் இது பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகக் கருதினார்கள். * -

பாவேந்தர் பாரதிதாசன்கூட இதில் நம்பிக்கை யில்லாமல், மிடல்' என்பதனை வேலி என்று பொருள் கொண்டு வேலியிட வேண்டுமோ? என்று பொருள் கண்டிருக்கிறார். அதிலும் அவர் ஊரின் நல்லெண்ணத் தில் துளியும் ஐயப்படவில்லை. அத்தகைய பண்பாடுடை யவர்களின் நிலத்துக்கு வேலியடைக்க வேண்டியதில்லைட ஊரே காப்பாற்றும் என்று கூறுகிறார். அவர் அத்தகு கருத்துக் கொண்டதற்குக் காரணம், நிலம் வி,ை போடாமலேயே விளையும் என்று வள்ளுவர் சொல்ன் யிருப்பதாகக் கருதியதே போலும்!

திருவள்ளுவர் அப்படிச் சொல்லவில்லை. நிலத்தை உடையவர்கள் விதை பாவவேண்டுமோ என்ற குறிப்பிலேயே திருவள்ளுவர் பேசுகிறார் என்று கருது வதில் தவறில்லை. - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/39&oldid=1276253" இலிருந்து மீள்விக்கப்பட்டது