பக்கம்:குறட்செல்வம்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கற்பித்தான்் கெஞ்சழுங்கப் -

பகர்ந்துண்ணான் விச்சைக்கட் டப்பித்தான்் பொருளே போற்

றமியவே தேயுமா ஒற்கத்துள் உதவியார்க்

குதவாதான்் மற்றவன் எச்சத்துள் ஆயினும் அது : சுறியாது விடாதே கான்.' கவியரசன் கம்பன் "உதவி கொன்றோர் உய்தற்கு உபாயமே இல்லை' என்று கூறுகின்றான். திருவள்ளுவர் வையத்துள் வாழ்வாங்கு வாழ வகுத்துக் காட்டிய அறநெறிகளுள் செய்ந் நன்றி மறவாமை ஒன்று. திருவள்ளுவர்,

எங்ான்றிகொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்க்கன்றி கொன்ற மகற்கு. . . என்ற குறட்பாவில் பயன்கள்ை அல்லது விளைவு களை அறுதியிட்டு உறுதியாகக் கூறுவது உணர்ந்து

இன்புறத் தக்கது.

எந்நன்றி என்பதன் மூலம், நன்றல்லா எல்லா வற்றினையும் உள்ளடக்கினார். கொன்றார்க்கும் என்பதி லுள்ள உண்மை நன்றல்லாதனவற்றைச் செய்யக்கூடாது என்பதையும் உணர்த்துகிறது. உய்வுண்டாம் என்ற செர்ல்வழி உய்தல் கூடும் என்று பொருள் கொள்ள முடிகிறதே. யன்றி, உறுதிப் பாடில்லை. செய்ந்நன்றி கொன்ற மகற்கு உய்வில்ல்ை என்பதில் தெளிவும் உறுதியும் இருக்கக் காண்கிறோம். உய்வில்லை என்ப்த னாலேயே பல பிறப்புக்களிலும் உய்வில்லை என்பதும் பெறப்படுகிறது. . . . . . . . . .

ஆதலால், நாம் அனைவரும் நன்றியறிந்து கடமைப் பாடுடையவர்களாக வாழ வேண்டும். நமக்கு இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/44&oldid=1276260" இலிருந்து மீள்விக்கப்பட்டது