பக்கம்:குறட்செல்வம்.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. எல்லார்க்கும் நன்றாம் பணிதல்


மனிதனைக் கெடுதலில் வீழ்த்தும் குணக் கேடுகளில் தலையாயது ஆணவம். ஆணவத்தின் வழிப்பட்டது அகங் காரம், அகங்கார குணம் படைத்தவன் பிறரை மதிக்க மாட்டான், நல்ல வார்த்தைகள் பேச மாட்டன் இழித்துப் பேசுதலையும், பழித்துக் கூறுதலையுமே தொழிலாகக் கொள்வான். அதன் காரணமாகப் பகை வளர்ப்பான்; நண்பர்களை இழப்பான். தான்் உயர்ந்தவன் என்ற நம்பிக்கை அவனிடத்தில் இருப்பதனால், வளர்ச்சிக் குரிய கூறுபாடுகள் அவனிடம் இரா.

அவன் வாழ்க்கையில் மாறுதலும் இருக்காதுவளர்ச்சியும் இருக்காது. ஆணவத்தின் பகை அடக்க முடைமை. அடக்கமுடைமையை அணிகலனாகக் கொண்டவர்களுக்கு ஆணவத்தின் வாசனையே இருக் காது. பணிவும் இன்சொல்லுமே அவர்கள்பால் குடி கொண்டிருக்கும். - .

அடக்கமுடைமை என்பது அச்சத்தினால் பணித்து செல்லும் கோழைத்தனத்தைக் குறிப்பதன்று. எதிர்த் தாக்குதல் செய்யும் ஆற்றல் இருந்தும், அதனைச் செய்யாமையே அடக்கமுடைமை! அறிவு, செல்வம், புகழ் ஆகியவைகள் இல்லாமற் போயினும் அடக்கமுடைமையின் காரணமாக மேற்கண்டவற்றைப் பெறுவதோடன்றிச் சிறப்பாகவும் வாழமுடியும் ஆனால், மேற்கண்ட எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/51&oldid=1276346" இலிருந்து மீள்விக்கப்பட்டது