பக்கம்:குறட்செல்வம்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

வற்றையும் பெற்றிருந்தாலும் அடக்கம் இல்லாமற் போனால், அவர் பெற்றிருக்கிற அனைத்திலுமாய சிறப்புக்களையும் இழந்து இழிநிலை எய்துவார். ஆகை யால் நற்குணங்களுள் மிகமிகச் சிறந்தது அடக்கம் உடைமை!

அடக்கமுடைமை எல்லோருக்கும் தேவை. எப்பொழு

தும் தேவை. அதுவும் எல்லாவிதமான தகுதிப்பாடுகளும்

இருக்கின்ற போழ்து, அடக்கமுடையவராக இருத்தல் சிறப்பிற்கெல்லாம். சிறப்பு.

‘ஒருவனுடைய இயல்பான பண்பை அவனுடைய செல்வம், புகழ், பதவி ஆகிய தகுதிப்பாடுகள் உயர்கின்ற போழ்து காணவேண்டும் என்பது ஒர் ஆங்கிலப் பழமொழி. பொதுவாக அறிவினாலும், செல்வத்தி னாலும், பதவியினாலும், தவத்தாலும் இன்ன பிறவற்றா லும் செருக்கு தோன்றுவதுண்டு.

அறிவினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று அருணந்தி சிவாச்சாரியார்; செல்வத்தால் செருக்கடைந்து அடக்கப்பெற்றதற்குச் சான்று ஜார் பேரரசன். பதவியினால் செருக்கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று நான்முகன். தவத்தினால் செருக் கடைந்து அடக்கப் பெற்றதற்குச் சான்று கொங்கண

ஆதலால், திருவள்ளுவர் அறிவு, செல்வம், புகழ், பதவி முதலிய இல்லாதார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பதைவிட இவையனைத்தும் உடையார் அடக்கப் பண்பில்லாதவராக இருப்பது ஆபத்தான்து என்று குறிப்பிடுகிறார். . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/52&oldid=1276347" இலிருந்து மீள்விக்கப்பட்டது