பக்கம்:குறட்செல்வம்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. குடிமை


ஒழுக்கம் என்பது ஒன்றல்ல்-இரண்டல்ல. பல கூறுகளை உடையது. எனினும் இரண்டு பெரும் பிரிவாக ஒழுக்க நெறியை வகைப்படுத்தலாம். தனி மனிதன் தன் னுடைய வாழ்க்கை வட்டத்தில், தனக்காகக் கடைப் பிடிக்கும் ஒழுக்கம் ஒன்று. பிறிதொன்று தனிமனிதன் தான்் வாழும் சமுதாயத்தோடு தொடர்புகொள்ளும் முறையில் கடைப்பிடிக்கும் ஒழுக்கம். .

இந்த சமுதாய ஒழுக்கத்தைக் குடிமை ஒழுக்கம் என்று சொல்லலாம். இதையேதான்் குடிமைப் பயிற்சி என்று தமிழிலும், Citizenship என்று ஆங்கிலத்திலும் வழங்கு கிறார்கள். .

ஒரு நாட்டின் பெருமை அந் நாட்டுக் குடிமக்களின் சிறப்பாலேயே அமைகின்றது. குடிமக்களின் நிலையு. சமுதாயக் கூட்டு ஒருமைப்பாட்டுணர்வு இன்றியமை யாதது. - - .

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமுதாய வாழ்வியல் நூலை ஆக்கித்தந்த திருவள்ளுவர் இதனைத் தெளிவாக வலியுறுத்துகின்றார். திருக்குறளின் ஒழியியலே குடியியல் பேச எழுந்ததாகும். -- -

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும். என்பது குறள். இக் குறளுக்கு சாதிகள் வழிப்பட்ட நச்சு நாகரிக்ச் சூழலில் வாழ்ந்த பரிமேலழகர் சாதி முறை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/55&oldid=1276363" இலிருந்து மீள்விக்கப்பட்டது