பக்கம்:குறட்செல்வம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்55


ஆதலால் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று அனுபவிக்கக் கூடிய சமவாய்ப்புச் சமுதாயத்தை ஏற்றுக் கொண்டு அதற்கேற்ப வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது மூன்றாவது ஒழுக்கம். வாழ்வில் இம் மூன்றுஒ ழுக்கங்களையும் கடைப்பிடித்து ஒழுகுவோரே இந்தியக் குடியுரிமைக்கு ஏற்புடையராவர். அவர்தம் பெயரே பாரத நாட்டு மக்கள் பட்டியலில் என்றும் நின்று விளங்கும்.

அப்படி மக்கட் பண்புடன் வாழ்ாதார் பெயர்கள் மக்கள் பட்டியலிலிருந்து விலக்கப்பெற்று, இழிதன்மை யுடைய கால் நடை'களின் கணக்கில் சேர்க்கப்படும். இக் கருத்திலேயே ஒழுக்கமுடைமை, குடிமை” என்ற குறள் எழுந்தது. - -

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம் இழிந்த பிறப்பாய் விடும் -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/57&oldid=1276364" இலிருந்து மீள்விக்கப்பட்டது