பக்கம்:குறட்செல்வம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18. உண்மைக் குடிமக்கள் யார்?


மனித சமுதாய அமைப்பின் வழியிலேய்ேதான்் நகர, நாட்டு அமைப்புகள் தோன்றுகின்றன. மனித சமுதாயம் நாடுகளை உருவாக்குகின்றது. காலப்போக்கில், நாட்டின் வழி மனித சமுதாயம் பெருமை பெறுகிறது. புகழ் - பெறுகிறது. இந்த உணர்ச்சி வடிவத்தில் வோன்றுவது தான்் தாய் நாட்டுப் பற்று.

ஒரு நாட்டின் குடியுரிமை பெற்று வாழுதல், மனி தனின் விழுமிய சிறப்புகளுள் ஒன்று. உலகில் பல்வேறு பகுதிகளில் குடியுரிமை பெறாத மக்கள் நாடற்றோர் என வாழ்கின்றார்கள். அது பீடன்று. மேலும் நிரந்தர மான நல்வாழ்வுக்கும் உத்தரவாதமில்லை. -

ஒரு நாட்டின் சட்டபூர்வமான குடியுரிமை பெற்றால் மட்டும் போதாது. அந் நாட்டு மக்களின் மொத்த நலனை எண்ணத்திற் கொண்டு ஒழுகுகின்றவர்களாகவும் இருக்க வேண்டும். தனிமனித ஒழுக்கங்களைப்போல, நாட்டு

கங்கள் என்று சில இருக்கும். அவ்வொழுக்கங்களை மேற்கொண்டு ஒழுகுகின்றவர்களே உண்மையான குடி

ஒரு நாட்டில் பிறந்து விட்டதனாலோ அல்லது மக்கள் தொகைக் கணக்கெடுப்பவர்கள் கணக்கில் சேர்த்து கொண்டமையினாலோ ஒருவர் ஒரு நாட்டின் உண்மை வான குடிமக்னாகி விடுவதில்லை.

முடியாட்சி நிலவிய காலத்தில் தோன்றிய திருக்குறள் சிறந்த குடிமக்கள் ஆட்சியைப் பற்றியும் கூறுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/58&oldid=1276365" இலிருந்து மீள்விக்கப்பட்டது