பக்கம்:குறட்செல்வம்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

துன்பங்களையே தன்னுடைய செழிப்புக்கு உரியவை: களாக மாற்றிக்கொண்டு தன் பெருமையை உயர்த்தி வளம் பெருக்கித் தீங்கிழைத்தோருக்கும் உண்ண உணவும்

பருக நீரும், தந்து வாழ்விக்கிறது. -

ஆக, தீங்கு செய்தோசைப் பொறுத்தல், அத் தீங்கு களையே தன்னுடைய வளர்ச்சியின் நிலைக்களன்கனாக மாற்றிக்கொண்டு வளர்தல், பொறுத்தலினும் மிஞ்சிய வாழ்விக்கும் பணியினைச் செய்தல் ஆகியவற்றால்: நிலத்தின் பெருமை உயர்கிறது.

அதுபோலவே, தீங்கு செய்வோரை எதிர்த்து அழித்தல் நலமன்று. அங்ங்னம் அழித்தால், தீங்கு செய்யப்பட்டார் மட்டும் அழிவதில்லை. தீங்கு செய்தாரின் நல்லியல்பும் கெட்டு-காலப்போக்கில் அவர்தம் செங்குருதி முறிந்து அழிவையும் அனைத்துக் கொள்ள நேரும்.

உலகியல் பரிணாம தத்துவப்படி, ஒன்றிலிருந்து பிறிதோன்று தோன்றாது. அழிவிலிருந்து அன்பு தோன்ற முடியாது-ஆக்கம் தோன்ற முடியாது. அழிவிலிருந்து அழிவே தோன்றும். -- -

பகைவரை ஒறுக்கத் தோன்றும் பகையுணர்ச்சி நம்மையும் அழித்தொழிக்கும். அதனாலன்றோ, புராணங் களிலும்கூட அசுரர்களின் அழிவு பேசப்படவில்லை. அவர்களின் மனமாற்றமே பேசப்படுகிறது. . .

பகைவர் நமக்குச் செய்யும் தீங்குகளால் நாம் . அழிகிறோம் என்பது உண்மையன்று. தம்முடைய குறைகள் மிகுந்திருக்குமானால் பகைவர்களுக்கு இடமேற் படும். இதற்கு மாறாக அவர்களால் நமக்கு விளையும் துன்பங்களையும் தொல்லைகளையுமே வாயில்களாகக் கொண்டு, புது அறிவும் புது முயற்சியும் செய்வோமாயின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/62&oldid=1276354" இலிருந்து மீள்விக்கப்பட்டது