பக்கம்:குறட்செல்வம்.pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்75

இதனையே இந்த அறநெறியையே இந்தக் குறள் வலியுறுத்துகிறது. அதாவது ஒழுக்கக்கேடு என்பது ஒருவரை மையமாகக் கொண்டது மட்டுமன்று; பலரைஅதாவது மனித சமுதாயத்தை மையமாகக் கொண்டு வளருவதே ஒழுக்க நெறி. .

இந்தக் குறள் புறங் கூறாமையில் இருக்கிறது. புறங் கூறுகிறவர்கள் நேரடியாகச் சொல்லுதற்குரிய ஆளுமை யும் அசைவிலா உறுதியும் இன்மையின் காரணமாகவே புறங் கூறுகிறார்கள். புறங்கூறுவதே ஒரு குற்றம் என்று கருதும் அறிவு இருக்குமானால் புறங்கூற மாட்டார்கள். அவ்வழித்திரிபுகள் ஏற்படா. ஒரு தவற்றில் பலர் பங்கு ஏற்கக்கூடிய வாய்ப்பும் தடைப்படும். காலமும் மிஞ்சும், மனித சக்தியும் மிஞ்சும், பகையும் குறையும். எதிர்பார்க் கின்ற குறைகளும் நீங்கி, நிறைகளும் ஏற்படும்.

ஆதலால் பிறர் குற்றம் காண்பதற்கு முன் நமது

குற்றத்தை நாமே பார்த்து திருத்திக் கொள்வோமாக.

நாம் அனைவரும் நல்லவர்களாகி அவ்வழி மற்றவ களையும் நல்லவர்களாக வாழச் செய்வோமாக! .

బ్రిణీ త్తి

ግፍ° ግን§ , y , «6

סל "אל

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/77&oldid=1276375" இலிருந்து மீள்விக்கப்பட்டது