பக்கம்:குறட்செல்வம்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸77

பயனில்லாமலே அழிவதைப் பார்த்து, கழிவிரக்கம் கொள்கிறார் திருவள்ளுவர்.

பயனற்ற சொற்களைப் பேசிப் பொழுது போக்கும் புல்லியமாந்தரை இளங்கோவடிகள் வறுமொழியாளர்' என்று ஏசுகின்றார். திருவள்ளுவர் பயனற்ற சொற்களைக் கேட்டு மகிழ்வோரையும் கண்டிக்கின்றார். -

பயனில்சொல் பாராட்டு வானை மகன் எனல் மக்கட் பதடி எனல் -

என்று கூறுகிறார். நெல்லோடுதான்் பதரும் சேர்ந்திருக் கிறது. அதனாலேயே, அதுவும் நெல்லாகி விடுமா என்ன? பயன்படுத்துவோர் விழித்தெழும் வரையில் பதரும் நெல்லோடு சேர்ந்திருக்கும். பின்னர் பதர் துற்றப்பெறும். நெல்லினின்றும் பிரிக்கப் பெற்று, கழிக்கப் பெறும்

அதுபோலவே, பயனற்ற சொற்களைப் பேசிக் கொண்டு தம்மை உயர்ந்தார் போல - நீதிமான்களைப் பேர்ல கருதிக்கொண்டும்-காட்டிக் கொண்டும் சிலர் வாழ் கின்றார்கள். ஏன்? பலர் வாழ்கின்றார்கள் என்பது அறிந்ததே. ஆனாலும் காலம் வருகின்ற போழ்து, பயனில் சொல் பாராட்டித் திரிந்தவர்களை நாடு ஒதுக்கும்; ஒறுக்கும். . - - -

ஒரு மனிதனுடைய உள்ளுணர்ச்சி எத்தகையது என்பதை அவனுடைய சொற்கள் காட்டும். நிலத்தின் இயல்பை, தண்ணிர் காட்டுவது இயற்கை. அது போலவே, உணர்ச்சி, எண்ணம் ஆகியவற்றின் இயல்பு களைச் சொற்களே காட்டும். "பயனற்ற சொற்களை வழங்குகின்றவன். அறிவுடையவனாகவோ, இனிய பண்புடையவனாகவோ இருக்க முடியாது. நீதி நெறி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/79&oldid=1276374" இலிருந்து மீள்விக்கப்பட்டது