பக்கம்:குறட்செல்வம்.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90🞸 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தூண்டி உயிர்பெற்று வாழவும் உய்தி பெறவுமேயாகும். இப் பார்வையோடு இரப்ப்ாசைப் பார்த்தால் ஏழ்மையின் துன்பமும் ஏளனமும் தோன்றாது. இடுவோர் இயல்பு, இரப்பாரின் துன்பம் மாற்றுவதாக இல்லாமற்போனால் இரப்போர் வாழ்க்கை கொடுமையானது.

ஈத்துவக்கும் இன்பம் பெற விழைவோர்க்கு இரப்பார் இல்லையானால் அவ் வின்பத்தைப் பெற முடியாமல் அன்றோ போய்விடும்! வைத்துடைமை வன்கணாளர் வாழும் நாட்டிலே இரப்பார் இருத்தலைவிட இறத்தலே நன்று என்று வள்ளுவரே வகுத்துப் பேசுகின்றார்.

ஆனால், வள்ளுவர் காலச் சூழல் வேறு. நாம் வாழும் சூழல் வேறு. வள்ளுவர் காலத்தில் பிறர் துன்பம் மாற்ற முடியாதபோது - பிறருக்கு உதவி செய்ய முடியாத இயல்பு வந்துற்றபோது தம்மைத்தாமே மாய்த்துக் கொண்ட காலம். இன்றோ பொருள் பெரிதாகி, ஈர நெஞ்சின்றி இவறிக் கூட்டிப் பொருள் சேர்க்கும் காலம். இந்தக் காலத்தில் இரப்போர் நிலை இரங்கத்தக்க தாக உள்ளது. முழங்கால் கடுக்க முயன்று ஏற். முதலாளி' என்றாலும் காசு தராமல் 'உடம்பு சரியில்லையா?’ என்று கேட்கும் காலம். ஆதலின் இரப்போர் தொகை குறைவதே நல்லது. எனினும் உதவி, சேவைகளின் மூலம்தான்் மனித உயிர்கள் வளர்ச்சியடைய முடியும். *

ஆதலால், இரப்பார் ஆலையில் உள்ளார் இரக்காம லேயே வலியச் சென்று கொடுப்பது-அல்லது வாழ்விப்பது நலம் தரும். அத்தகு சமுதாயப் பணிமனைகள் நாடு முழு வதும் பெருக் வேண்டும். இக் கருத்திலேயும் வள்ளுவர் கூறி உள்ளார்.

இலன்என்னும் எவ்வ்ம் உரையாமை ஈதல் குலனுடையான் கண்ண்ே உள. - என்ற குறள் இக் குறிப்பினதே யாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/92&oldid=1276388" இலிருந்து மீள்விக்கப்பட்டது