பக்கம்:குறட்செல்வம்.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறட்செல்வம்🞸93

இன்றைய உலகில் தன் தேவைகள் மட்டுமே தெரிந்த வர்கள் பெருகி இருக்கிறார்கள். கொடுப்பவர் சக்தி அறிந்து கேட்பவர்கள் இல்லை. கிடைத்தமட்டும் பார்க்கலாம் என்ற உணர்ச்சியே மேலோங்கி நிற்கிறது. அதிலும் வறியவர்கள் டிட்டும் இரப்பதில்லை. வாழ முடிந்தவர்களும் கூட இரக்கிறார்கள்.

கொடுப்பதன் மூலம் பெறுகிறவர்களுடைய இனிய மகிழ்ச்சி நிரம்பிய முகத்தை காண்பதென்பது இன்றைக்கு அருமையாகிவிட்டது. அப்படியே ஒரே வழி கண்டாலும் நீரின்மேல் சலனத்தைப் போல சில பொழுதேயாம். வாங்கிக் கொண்டேயிருக்கும்போது மகிழ்ச்சி. ஒருநாள் தடைப்பட்டாலும் மகிழ்ச்சி மறைந்து ஆச்சரியம் தோன்றும். . . . . .

இந்த உலகத்தில் எப்படிப் பலர் கேட்கக் கொடுத்து வாழும் வாழ்க்கையை இன்பம் என்று கருத முடியும்? அதனாலன்றோ திருக்குறள்.

இன்னாது இரக்கப் படுதல் இரந்தவர் இன்முகம் காணும் அளவு, -

என்று உலக நடையை அறிந்து ஒதுகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறட்செல்வம்.pdf/95&oldid=1276390" இலிருந்து மீள்விக்கப்பட்டது