பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

IՂՈ লম্ব எய்தும் மடியளந்தான் என்றுதான் வள்ளுவர் எழுதியிருப்பார். அந்த இரு சொற்களையும் எய்தும் அடி அளந்தான் என்று பிரித்து, திருமால் வாமனன் வடிவில் வந்த கதையை இங்கே வலிந்துப் பொருத்திவிட்டார் பரிமேலழகர் ΦΤρύTΙ ΠΙΤΤΑ, ΟΥΤ Ι Ι (σι)/Τ. IO6 - * . டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா நாவலர் நெடுஞ்செழியன் போன்றோர், புராணக் கருத்துகளை வள்ளுவர் புகுத்தவில்லை. இது இப்படித்தான் இருக்கும் என்று எய்தும் மடி அளந்தான் என்று உரை கூறுவார்கள். ஆகவேதான் எய்தும் அடி அளந்தான் ஆ அயது என்று சொல் பிரித்துக் கூறுகிறார்கள். - தாஅயது என்றால் பரந்த என்று பொருள். ஆ அ என்றால் ஆச்சரியச் சொல் அயலாது என்றால் பொல்லாநிலம். பொல்லா நிலம் என்றால், நரகம், மயானம், சக்தி என்றெல்லாம் அர்த்தம் உண்டு. மடி என்றால் சோம்பல் என்றுமட்டும் பொருள் இல்லை. மடிதல், கேடு, நோய் என்றும் பல பொருள் உண்டு. மடியிலாள் மன்னவன் என்று குறள் கூறுவதால், மன்னவனுக்கு மட்டும்தான் இந்தக் குறள் பொருந்துமா என்றால் - மக்கள் நிலை என்னாவது? மன்னனுக்கு மட்டும் கூறினால் போதும், மக்களுக்கும் அது பொருந்தும் என்று ஏற்றுக்கொள்ளாமலா மடியின்மை என்ற அதிகாரத்தில் வருகிற ஒன்பது குறள்பாக்களிலும், மன்னவன் என்னும் சொல்லே இல்லை. மக்களுக்காகவேதான் கூறியிருக்கிறார் என்று நாம் கருதலாம் அல்லவா? இங்கு மன்னவன் என்ற சொல்லைப் பாருங்கள். மன் என்றால் சிந்திப்பவன். நவன் என்றால் புதுமையாக, பொறுமையாக தன்னைப் பற்றி, தன் நிலையைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுகிற சீர்மையாளன் என்று நாம் கூறலாமே! - அடி அளந்தான் என்பது, ஞானத்தை அளந்தான் எனலாம். ஞானம் நிறைந்தவன் என்பதாகும். தா. அயது என்று பரிமேலழகர் பிரித்தாலும், ஆ அயது என்று நாவலர் பிரித்தாலும் வரும் பொருள் எப்படி இருக்கும்?