பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 107 - தாஅயது என்றால், பரந்த நிலப்பகுதி. - - ஆஅயது என்றால் ஆச்சரியப்படும்படியான நிலப்பகுதி. தாஎன்றால் அழிவு, கேடு, பகை, வலிமை, படை என்றும் அவற்றில் உழல்கிற நிலப் பரப்பு என்றும் கூறலாம். இனி இனம் காண்கிற புதிய கருத்தைக் காணலாம். மடியிலான் என்றால் நோய் அற்றவன். அதனால் வரும் கேடற்றவன் கேடுகள் நீங்கப் பெறுவதனாலேயே, கிடைக்கின்ற புத்துணர்ச்சி நிறைந்தவன் : புதுமையான சிந்தனைகளுக்குத் தலைவனாக, மன்னவனாக, மாபெரும் வழிகாட்டுகிறவனாக விளங்குபவன். - - எய்தும் என்றால், வருவதைப் பெறுவதும் தருவதை அடைவதும் அல்ல. அம்பைக் குறிபார்த்து, அடைய வேண்டியதை எதிர்பார்த்து, வேகமாக விடுகிற செயல்படும் இலட்சிய நோக்கின் எழுச்சியால், ஏற்படுகிற முயற்சியால் பெறுவது. அதாவது தன்முயற்சியால், தன் எழுச்சியால், தானே முயன்று, வெற்றிபெறுகிறவன். தனித் தன்மை நிறைந்தவன். அடிஅளந்தான் என்றால், தன்னை அறிந்தவன். தன் திறமையை அளந்தவன்: வாழ்க்கையின் மூலத்தை உணர்ந்தவன்: வாழ்கின்ற உபாயங்களைத் தெரிந்தவன். அறிவாற்றலை, செயல் ஆற்றலை மிகுதியாகக் கொண்டவன். இப்படிப்பட்டவன், நல்ல நிலமாகிய சொர்க்க பூமியையும், பொல்லா நிலமாகிய நரக பூமியையும், இந்த உலகிலே வாழும் போது படைக்கத் தெரிந்தவனாக வாழ்வதால், இவன் சிறந்த மனிதனாகத் திகழ்கிறான். - இதற்கு அடுத்த அதிகாரம் ஆள்வினை உடைமை. இதற்கு முந்தைய அதிதாரம் ஊக்கமுடைமை. ". ஊக்கத்திற்கும், முயற்சிகளுக்கும் இடையே உள்ள அதிகாரம் சோம்பலற்ற நிலைமை. தேம்பித்திரிய வைப்பது சோம்பல் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதானே. a " மடிவந்தால் குடிகெட்டுவிடும் குடிகெடும் முன்னே