பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 1и பரிமேலழகரும், செல்வம் என்றும் திருமகள் என்று நாவலரும், செல்வம் என்று இளங்குமரனாரும் பொருள் எழுதியிருக்கின்றனர். இலக்குமி என்பது இந்து மதப் பெண் தெய்வம். செல்வத்திற்குரிய ஒரு தெய்வமாக, செல்வச் செழிப்பு வழங்கும் பெரும் இராசியான தெய்வமாக மக்கள் வழிபடுகின்றார்கள் என்பது நம்மவர்கள் மரபு. - - - 'இப்படிப்பட்ட புராணக் கருத்தை வள்ளுவர் புகுத்த வில்லை. பரிமேலழகர் தனது மத ஈடுபாட்டின் காரணமாக இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார். என்று எதிர்ப்பவர்களின் உரைகளில், இலக்குமியல்ல, செல்வம் என்றே குறிப்பிட்டால் போதும். பொதுமறையான குறளுக்கு இந்தப் பொருளே பொருந்தும் என்பது இன்னொரு சாராரின் இனிமையான வாதம். - - இதுபோல மாறி மாறி பொருள் தருவது, உரையாசிரியர்கள் அவரவர் வாழ்கிற காலக் கட்டத்தின் தாக்கத்தால் ஏற்படுவதாகும். நான் எப்போதும் திருக்குறள் நூலை உடலியல் பற்றி விளக்குகிற வாழ்வியல் நூல் என்றே கூறுவது வழக்கம். மதம் சார்ந்த வாழ்வியல் நூல், பொருள் சார்ந்த வாழ்வியல் நூல், அரசியல் சார்ந்த வாழ்வியல் நூல் நீதி அறம் காட்டும் வாழ்வியல் நூல் என்பது பலரின் கருத்துகள். . . . எல்லாவற்றிற்கும் அடிப்படையாக, ஆதாரமாக விளங்கும், உடலை வளப்படுத்த, நெறிப்படுத்த வள்ளுவர் மிகவும் நுண்ணிய முறையில் அமைத்துவைத்த பாலடைக் கட்டிகள்தாம் நமது தமிழ்ப்பாரம்பரியத்தைத் தெளிவாக்கும் திருக்குறள் பாக்கள். - - விருந்தினரைப் பேணியும், ஒம்புதலும் செய்தால், வந்து இலக்குமி தங்குவாள். செல்வம் தங்கும் என்பது நம்பிக்கை. விருந்தோம்பலால், செல்வம் நல்வழிப் படுகிறது. தகுதியும்,