பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- 116 டாக்டர் எஸ் . நவராஜ் செல்லையா இதெல்லாம் அகனமர்ந்து, முகனமர்ந்து, நல்விருந்தை ஒம்புகிறவன், வீடாகிய மனத்தில், சிறப்பும் செழிப்பும், அழகும் ஆனந்தமும், இன்பமும் ஈடிணையற்ற வளமும் பெருகும் என்கிறார் வள்ளுவர். வலிவான உடல் தெளிவான மனம், பொலிவான முகம், தீதற்ற இனிய சொற்கள், எதிர்படுவோரை மதிக்கின்ற மாண்பு, வரவேற்கிற பண்பாடு, உதவுகிற இலட்சியம். அந்தக்காட்சிகளுக்காகத்தான்இல்என்றார். இல் என்றால் இடம், வீடு. வீடு என்றால் சுகம் மிகுந்த சொர்க்கம். - இப்போது நாம் ஒரு புதிய பொருளைக் காண்கிறோம். அகத்திலே மன அழகும் குண அழகும், முகத்திலே அன்பழகும், பண்பழகும், தேகத்திலே தெம்பழகும் தேர்ந்த அழகும், வாழ்க்கையிலே வடிவழகும் வளவழகும் நிறைந்திட உண்டி கொடுத்து உயிரைக் காப்பாற்றுங்கள். உயிர்களுக்கு இன்பம் ஊட்டுங்கள். உயரிய வழிகளைக் காட்டுங்கள். உலகத்தின் உண்மை வாழ்க்கையை உணர்வித்துக் கூட்டுங்கள். அதுதான் உங்கள் அழகையும் ஆனந்தத்தையும் வளர்க்கும். இப்படிப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்தத்தான் அகனமர்ந்து முகனமர்ந்து ஓம்பல் என்ற மூன்று சொற்களைப் பெய்து, செய்யாள் (அழகு) எப்போதும் உறையும் என்ற சொல்லையும் இணைத்தார். - கற்பனைக்கு இடம் தராது. கட்டுடலோடு உலாவருகிற கனிவான காட்சிக்கே வள்ளுவர் முக்கியத்துவம் தந்துள்ளார். ஒம்பல் என்றால் மன ஒருமை நிலை என்று அர்த்தம். மன ஒருமைப்பாட்டுக்கு, சுகம் உலாவருகிற தேகமும் தேவைதானே! - அடிப்படையான தேகத்திற்குள்ளே ஆட்சி செய்து வருகிறது, உள்ளம் என்றால் நல்லழகும், சொல்லழகும். முகம் என்றால் வழி. உண்மை என்றும் அர்த்தம். முகத்திலே அன்பு வாய்ச் சொல்லிலே உண்மை. மனத்திலே அன்பு. இப்படி விருந்தை உபசரித்துப் பாருங்கள்.