பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 டாக்டர் எளப் நவராஜ் செல்லையா 1. பிறப்பும் சாக்காடும் உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு சாக்காடு - உறங்குவது போலும்; பிறப்பு - உறங்கி விழிப்பது போலும் என்றே எல்லா ஆசிரியர்களும் உரை எழுதிப் போயிருக்கின்றனர். உறக்கம் சாவைப் போன்றது. பிறப்பு விழித்து எழுவது போன்றது. இவ்வளவு எளிய செய்தியை எல்லாம் அறிந்த வல்லவரான வள்ளுவர், இந்தச் சாதாரண செய்தி பற்றிப் பாடியிருப்பாரா? அதில் உள் நோக்கம் இருக்குமே பொடி வைத்துப் பேசுவதில் மட்டுமல்ல. போடுகிற சொல்லையும் பல சிந்தனைகள் உண்டாக்குவது போலத்தானே சொல்லி இருப்பார்! அதன் விளைவுதான் இந்தப் புது விளக்கம். சாக்காடு என்றால் சாவு என்று பொருள் உண்டு. அதைச் சொல்லி இருப்பார் செத்துப் போவது எண்பார்கள். சத்துப் போவதால்தான் செத்துப் போவது என்று கூறுவது இன்றைய ஆராய்ச்சியின் முடிவாக இருக்கிறது. உடம்பில் சத்துக் குறைய குறைய. உறுப்புகள் தளர்ந்து தளர்ந்து மெலிந்து, வதங்கி குறுகித்தான் உயிர்கள் மடிந்து போகின்றன. உடல்கள் நைந்து சாகின்றன என்பது எல்லோரும் அறிந்த உண்மைதான். இங்கே வள்ளுவர் கூற வருகின்றதாக என் கருத்தைப் பார்ப்போம். சாவில் இருப்பது போல் நாம் உறங்கும் உறக்கம் இருக்கிறது. அதாவது சாக்காடு போலும் உறங்குவது என்பதன் பொருளாக வருகிறது. பிறப்பு என்றால் தொடக்கம். ஆரம்பம் என்பது பொருள். உறங்கி விழித்ததும் வாழ்க்கை ஆரம்பமாகி விடுகிறது. விழித்தது போலும் பிறப்பு என்பதே இதன் பொருளாகிறது. கண்களை மூடி உறங்குகிறோம். எதற்காக?