பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 19 உடலில் சிறப்புப் புலன்கள் ஐந்து உண்டு. உலகின் முக்கிய பஞ்ச பூதங்கள் போல, உடலில் முக்கிய பஞ்சேந்திரியங்கள் இருக்கின்றன. இவைதான் அறிவின் வாசல்களும் பூசல்களும் ஆகின்றன. உயர்ந்த, உன்னதமான உணர்வையும், அறிவையும், அவற்றின்மூலம் தெளிவையும் பெற, ஐயம் தெளிதல் முக்கியம் என்றோம், அதற்கு ஐந்து வகையான வினாக்களைத் தொகுத்து. தெளிய வேண்டியிருக்கிறது. இதை மிக அழகாக விளக்கிப் பாடியிருக்கிறது. பிங்கல நிகண்டு. ... " - - - அறிவான் வினாவல், அறிவொப்புக் காண்டல், ஐயம் --- இறுத்தல், அவன் அறிவுதான் கோடல், மெய் அவற்குக் காட்டலோடு ஐவகை வினாவே (பிங்கல நிகண்டு 380) - உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அறிந்து கொள்கின்ற ஆர்வம் அதிகம் உண்டு. அதைத்தான் உணர்வு என்கிறோம். இதையே ஆங்கிலத்தில் Sense என்கிறார்கள். உலக இயல்புகளை, நடைமுறைகளை மூளைக்கு உணர்த்த உடல் உறுப்புக்கள்தான் முக்கிய கருவிகளாக இருந்து உதவுகின்றன. அந்த முக்கிய உறுப்புக்கள் நாக்கு, கண், மெய், செவி, மூக்கு அவற்றின் செயல்கள் - சுவை, ஒளி, ஊறு,ஓசை, நாற்றம். - - இவற்றைச் செய்திட, அறிந்திட படிப்பு தேவையில்லை. உடலே தனது உணர்வு மூலமாகப் பெற்று, உணர்ந்து கொள்கிறபோது, அதுவே பழக்கமாகிவிட, அறிவாகி விடுகிறது. - -- படிக்காத மக்களும், இப்படிப் புலன் அறிவு உடையவர்களாக இருப்பதையே, தமிழில் பொது அறிவு என்கிறோம். ஆங்கிலத்தில் Common Sense என்கிறோம். - இந்தப் பொது அறிவிலே மேன்மை அடைந்திருப்பவரைத்தான் படிக்காத மேதை, பிறவி மேதை என்ற்ெல்லாம் புகழ்கிறோம். - -