பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 o டாக்டர் எஸ் , நவராஜ் செல்லையா அமைகிறது. நோய் வாய்ப்பட்ட உடல் நொந்து போவதுடன், நோவு நிறைந்த வாழ்க்கையையே நிலையாகி விடுகிறது. - ஆகவேதான், பொருளற்ற பிற பொருள்களை எல்லாம் பெரிதென்று எண்ணி, மருண்டு போய் அலைபவர்கள் இழிபிறப்பினர்கள் என்கிறார்கள். உடலை நன்கு பேணிப் பாதுகாக்கும் போது உறுப்புக்களின் இருள், நீங்கும். அறிவின் மருள் நீங்கும். கற்க வேண்டுவனவற்றுள், உடல் காக்கும் கலையே உன்னதக் கலை. ஒர்ந்துணரும் இதை உயர்ந்து விட்டால், அவரது அறியாமை, ஆதவன் கண்ட இருளாகி விலகும். பேதமை மிகுந்த பிறப்பும் சிறப்பு பெறும். பொய் நினைவுகள், பொல்லாத ஆசைகள், புண்படுத்தும் பழக்கங்கள் விலக வேண்டாத துன்பங்கள் வராது ஒழியும். உடலைக் காப்பது பற்றிய உணர்வும், தெளிவும், ஞானமும் வந்து விட்டால், காமமும் கெடும். வெகுளியும் அடங்கும் மயக்கமாகிய தெளிவின்மையும் விலகும். - இப்படிப்பட்ட மெய்யுணர்வைக் கொண்டு, தேகம் -காக்கும் தேர்ந்த ஞானமும், தேர்ச்சியும் பெற்றவர்கள், உயர்ந்த அறிவுடன் உலா வருவார்கள். உலகை ஆள்வார்கள். இந்த மெய்யுணர்வில் மேன்மை பெறுங்கள் என்கிறார் வள்ளுவர் மெய்யுணர்வு அதிகாரத்தில். - இயல்பாக உள்ள பொது அறிவுடன், கல்வி அறிவும்: மிகுந்திருந்தாலும், உடல்நலமில்லாத ஒருவரால், உலகுக்கு என்ன பயன் ஏற்படும்? ஆகவே, மெய்யுணர்வாக, நமது தேகத்தை நலமுறக் காப்போம். ஐயுணர்வு நிறையப் பெறுவோம். அறிவான, அழகான, அமைதியான, ஆனந்தமயமான வாழ்வு வாழ்வோம் என்று நாம் இன்றே முயற்சிக்கலாம் அல்லவா? - - -