பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 123 22. மழித்தலும் நீட்டலும் மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம் பழித்தது ஒழித்து விடின். கூடா ஒழுக்கம் என்ற அதிகாரத்தில் 10 வது பாடலாக இந்தக் குறட்பா இடம் பெற்றுள்ளது. அறத்துப் பால் என்றதுமே ஒழுக்கம் பற்றிய பகுதி என்று தான் அர்த்மாகிறது. சாதாரண மக்களுக்குரிய ஒழுக்கம், பழக்க வழக்கம் என்ன? எப்படி இருக்க வேண்டும்? இல்லறத்தில் ஈடுபட்டிருக்கும் மக்கள் எப்படி எந்த வகையில் ஒழுக்கம் காக்க வேண்டும் என்று விளக்கிக் கொண்டே வருகிற வள்ளுவர், மக்கள் வாழ்க்கையிலிருந்து விலகி, ஒரு மகிமை மிக்க வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் துறவியர் ஒழுக்கம் பற்றியும் உன்னதமாக கோடிட்டுக் காட்டுகிறார். துற + உ என்பது தான் துறவு என்றாயிற்று. உலக வார்க்கையின் இயல்பாக விளங்குகிற அகத்தையும் புறத்தையும் சுட்டிக் காட்டுவது உ . அந்த சாதாரண மனிதர் களின் ஆசா பாசங்களிலிருந்து விலகி வெளியேறி எல்லா வற்றையும் துறந்து நிற்பதைக் குறிப்பது துற. அப்படி துறந்து வெளியேறி வருகிற ஒருவரைத்தான் துறவி என்றார்கள். வி என்றால் அறிவு. ஆசாபாசங்களிலிருந்து அறிவோடு விலகி வருகிறவரைத்தான் துறவி என்றழைத்தனர். சாதாரண மக்கள் இல்லற வாசிகள். உருவத் தோற்றத்திற்கு உடையலங்காரம், ஒப்பனை, சீருடை என்று எதுவுமில்லை. ஆனால் துறவிகளுக்கென்று உடல் அமைப்பிலும் தோற்றத்திலும் சில முறைகளை அந்தக் காலம் தொட்டு இன்றைய காலம் வரை கடைப்பிடித்து வருகின்றார்கள். -