பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 13 ரஹமான் என்னும் கவிஞர் பாடுகிறார். உறக்கம் என்பது மரணத்தின் ஒத்திகை. நல்ல மனமும் நல்ல உடலும் இருக்கிறபோது உண்டாகிற உறக்கம் அமைதியானது. அலை பாயாதது. அப்படி உறங்கி விழித்தபிறகு அதிகாலையில் உண்டாவது பிறப்பு என்கிற ஆரம்பம். அதாவது வாழ்க்கையின் தொடக்கம். மீண்டும் அந்த நாளை, புத்துணர்ச்சியோடு தொடங்க வேண்டும். புதுப் பொலிவுடனும் புது வலிவுடனும் ஆரம்பித்து இனிவரும் நேரத்தை எதிர்வரும் சவால்களைச் சமாளிக்க வேண்டும். அதற்காக நீ எப்பொழுதும் ஆயத்தமாக இருக்க வேண்டும். - - களைப் பை நீக்கும் உறக்கமும், அடுத்த நாள் உழைப்பை ஏற்கும் ஆரம்பமும்தான் ஒருவரைச் சிறந்த மனிதனாக்கும் என்று கூறிய வள்ளுவர், இந்தப் பாடலை நிலையாமை என்னும் அதிகாரத்தில் வைத்தார். பொருள்தான் வாழ்க்கையின் பொற் பீடம் என்பதுபோலப் பொருள் சார்ந்த கருத்துக்களைச் சந்தர்ப்பம் பார்த்து, விதைத்துவிட்டு மகிழ்ந்தனர். உரையாசிரியர்கள். ஆனால் வாழ்க்கை இயலை, பொருளியல் என்று பேசினார்களே ஒழிய இதை மனிதவள உடலியல் என்று.இதுவரை யாரும் எழுதவும் இல்லை பேசவும் இல்லை. வள்ளுவர் அறம், பொருள், இன்பம் என்னும் இலட்சியத்துடன் பாடினார் என்றால், அறத்தைப் பின்பற்ற, பொருளைத் திரட்ட, இன்பத்தை முழுதும் நுகர, அதற்கு அடிப்படை ஆதாரமாக உடல் அமைந்திருக்கிறது. அதனைக் காத்து, வளர்த்து, உயர்த்தி உயர்ந்த வாழ்வு வாழுங்கள் என்னும் கருத்தை, மறைபொருளாக வைத்துப் பாடிச் சென்றார். அந்த மறைபொருளை மற்ற உரையாசிரியர்கள் தொடவே இல்லை என்பதால், என் விளையாட்டுத்துறை உடல்துறை பற்றிய அறிவைத் தெளிவாக்கவே இந்த ஆய்வு o என்று கூறி, மீண்டும் தொடர்கிறேன். -