பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I6 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா தாழ்ப்பாளான பூட்டு எதுவும் உண்டோ? அடைக்கும் தாழ்ப்பாள் எதுவும் இல்லாத உடம்பு இது! உடலில் தாழ்ப்பாள் போட்டுத் தடுத்து நிறுத்தக்கூடிய வழிகள் எதுவும் இல்லை. ஏனென்றால், உடல் என்பது ஒன்பது வாயில் கோட்டை வாயில் வழியே உயிர் போக எப்போதும் தயாராகவே இருக்கிறது. இங்கே உயிர் என்பது பிராணன். பிராணன் என்றால் காற்று அதாவது உயிர்க்காற்று. - உயிர்க்காற்றுதான், உடல் முழுவதும் உயிராக மாறி வந்து, உயிர்ப்புச் சக்தியைத் தந்து, உலா வந்து கொண்டிருக்கிறது. உடல் உயிர்க்காற்று நிறைய இருக்கும் வரையில் உடலுக்கு ஊறு இல்லை. வருத்தமும் நோயும் இல்லை. - உடம்பில் பிராணன் குறையக் குறைய, பிராணன் போகிறதே என்ற புலம் பல்தான் மக்களிடமிருந்து அலைபாய்ந்து வருகிறது. - - - உயிர்க்காற்று என்பதுதான் உயிராக வந்திருப்பதைப் பாருங்கள். இந்தக் காற்றாகத் திரியும் உயிரானது உடம்பு முழுதும் நிறைந்திருக்கிறது. இது ஒரமாக ஒதுக்குப்புறமாக உடலில் இருக்கிறது என்றால், அது எப்படி முடியும்? * . உயிர்க்காற்று எரிந்து குறைந்தவுடன் அங்கே கரியமல வாயுவானது இடம்பிடித்துக் கொள்கிறது. உயிர்க்காற்று எரிந்து குறைந்தவுடன் அங்கே கரியமில வாயுவானது, ஒடிவந்து இடம் பிடித்துக் கொள்கிறது. எங்கெங்கே கரியமில வாயுவானது உடலில் இடம் பிடித்துக் கொள்கிறதோ அங்கெல்லாம் வலியும் வருத்தமும் மிகுதியாகிவிடுகின்றன. -- . - மீண்டும் அந்த இடத்திற்கு அதிகமாக உயிர்க்க்ாற்று வந்தவுடன்தான், உடலில் ஏற்பட்ட அசதியும் துன்பமும் அகன்று போய் விடுகிறது. - - - - -