பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா உரிய நேரத்தில் வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. 3. சமாணன்: - உண்ணுகிற உணவுப் பொருட்களைச் சிறப்பாக ஜீரணம் செய்யும் பணியைச் செம்மையாகச் செய்ய வைக்கிறது. 4. உதானன்: காற்றை உள்ளே இழுக்கும் போதும் உண்வு உட்கொள்ளும் போதும் எதுவும் இடையூறாக ஏற்பட்டுவிடாமல் கட்டுப்பாட்டுடன் அந்த உறுப்புகளை நெறிமுறையுடன் இயக்கி வருகிறது. 5. வியானன்: - - உணவுச் சத்தையும் உயிர்க்காற்றையும் எல்லாச் செல்களுக்கும் ஏந்திச் சேர்க்கும் பணியைக் காட்டி வழி நடத்துகிறது. 6. நாகன்: கரியமில வாயுவை எருவாயின் கீழ் வழியாக வெளியேற்றுகிறது. - 7. கூர்மன்: - கண்களில் திடீரென்றுப் பாயும் வெளிச்சத்திலிருந்தும் வருகிற தூசிகளிலிருந்தும் இமைகளைத் திடீரென்று இயக்கி மூடச் செய்து கண்களைக் காப்பாற்றுகிறது. - - 8. கிரிகரன்: - மூக்கின் வழிகள் அடைபடாமல் சுத்தப்படுத்தி சுகமாகப் பணியாற்ற வைக்கிறது. - - 9. தேவதத்தன் - - உடம்பில் உயிர்க்காற்று குறைகிற இடங்களில் எல்லாம் தேவையான உயிர்க்காற்றைக் கொண்டுபோய் நிரப்புகிற பணியைச் செய்கிறது. கொட்டாவி மூலம் நிறைய காற்றைப் பெற வைக்கிறது.