பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 o டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா கூடி மகிழுமாறு இனிய சொற்களைச் சொல்லி, அவரோடு 'நட்பாடலை அறியாதார் தம்மைவிட்டு நீங்குமாற்றால், புறங்கூறி தம் கேளிரையும் பிரியப் பண்ணுவர். இது பரிமேலழகரின் பழம் பெரும் உரை. - - அதாவது, புறங் கூறுவார்க்கு யாவரும் பகைவராவர் என்பது கருத்து என்று, பரிமேலழகர் ஒரு முத்தாய்ப்பு வைத்துப் பெர்ருள் உரைக்கிறார். நண்பர்களோடு கொள்ளும் நட்புறவினால் ஏற்படும் நன்மையை அறியாதவர்கள் தாம், நண்பர்களைப் பற்றிப்புறங் கூறிப் பின்னர் அவர்களை விட்டுப் பிரிந்து போய் விடுவார்கள் என்று டாக்டர் நாவலர் உரையில் பார்க்கலாம். பிறரோடு இன்புற உரையாடி நட்பு கொள்ளும் திறம் அறியாதவரே, பிளவு உண்டாகுமாறு புறம் கூறி, இனிய உறவினரையும் பிரித்து விடுவர் என்று மதுரை இளங்குமரனார் பொருள் கூறுகிறார். - - இங்கே, எல்லோரது உரையிலும் பொருள் மாறிப்போவது, கேளிர்ப் பிரிப்பர் என்ற இடத்தில்தான். கேளிரைப் பிரிப்பர் என்று பரிமேலழகர் ஒரு எழுத்தைச் சேர்த்து பொருள்கூறுகிறார். கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களது உரையும் இப்படியே இருக்கிறது. - - இங்கே, நான் எந்த எழுத்தையும், சொல்லையும் கூட்டியோ குறைத்தோ வைக்காமல், இருக்கின்ற சொற்களை,அப் படியே வைத்துக் கொண்டு. பொருள் கண்டிருக்கிறேன். - பகச் சொல்லி என்றால் நீங்கும் படியான அளவுக்குப் புறங்கூறி என்று மற்றவர் சொல்லுகிற பொருள் எப்படி வருகிறது என்று பார்ப்போம். - -