பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 33 பக என்றால் படுதல், பிரித்தல், பிளத்தல். இந்தக் காரியத்தைச் சிறப்பாகச் செய்கிற போது பக+ ஐ = பகை ஆகி விடுகிறது. பகை என்றால் விரோதம், வெறுப்பு, உட்பகை என்று நாம் பொருள் காணலாம். - இப்போது, பகச் சொல்லி என்றால், உள் மனத்திலே ஏற்பட்டிருக்கும் விரோதம், வெறுப்பு காரணமாக, வெளிப்படையாக வெளியே காட்டாமல், உள்பகையாகக் கொண்டிருக்கிற தன்மை என்று நாம் ஒரு அர்த்தத்தைப் பெறுகிறோம். - இப்படி உட்பகையை உள்ளுக்குள்ளே வளர்த்து வைத்திருக்கிற கேளிர்அதாவது உறவினர், அல்லது சுற்றத்தார், பிரிப்பர். அதாவது பிரித்துவிடுவர். - யாரை உறவினர்கள் பிரித்து விடுவார்கள்? அதற்குப் பதில்தான், நகச் சொல்லி நட்பாடல் தேற்றாதவர் என்ற நான்கு சொற்களில் கூறப்பட்டிருக்கிறது. நக-மகிழுமாறு; சொல்லி = பேசி:நட்பாடல் = நல்ல உறவாக, சுற்றமாக சிநேகம் கொள்வதற்கு தேற்றாதவர் = தம்மை தேற்றிக் கொள்ளாதவர் என்று இப்படிப் பொருள் வருகிறது. - - - - தன் உறவாக சிநேகிதராக, சுற்றமாக, இனத்தவராக இருக்கும் ஒருவர், பிறர் போற்றும்படியாகப் புகழிலும் பொருளிலும் உயர்ந்துவிடுகிற போது, அந்த உயர்ச்சியை எழுச்சியை மனத்திலே தாங்கிக் கொள்ள முடியாமல் ஏற்றுக் கொண்டு வாழ்த்தவும் முடியாமல், வணங்கவும் முடியாமல், மனத்தில் தேற்றாதவராக, அதாவது பகைவராக மாறி, புறங்கூறுகிற, புன்மதியராகப் போய் அவனைப் பிரித்து விடுகிறார்கள். - . . - - - - எனக்கு ஏற்பட்ட குறளின் கருத்து இதுதான். கேளிர்