பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 34 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா. பிரிப்பர் என்றது, சுற்றத்தார் பிரித்து விடுகிறார்கள். ஒருவருக்குப் பகை என்றால், அந்தப் பகையானது வேறு எங்கிருந்தோ வந்து விடுவதில்லை. நேற்றைய நண்பர் - இன்றைய பகைவர். இன்றைய நண்பர்நாளைய பகைவர் என்பது அனுபவ மொழி. நேற்றைய உறவு - இன்றைய பகை. இன்றைய உறவு- நாளைய பகை. - நம்மைப் பற்றி நன்கு தெரிந்த ஒருவரே; நம்முடன் பழகி நமது அகம்புறம் இவற்றை நன்கு அறிந்தவரே, நம்முடன் கலக்காமல், போராடக் கிளம்பிவிடுகிறார். -- ஐந்து வயதிலே அண்ணன் தம்பி; பத்து வயதிலே, பங்காளி என்பது பழமொழி. நம்மைச் சுற்றி, பற்றிப்படர்ந்து வந்து கொண்டிருக்கும் மக்களைத்தாம், சுற்றம் என்றனர். சுற்றிச் சுற்றி வந்து, ஒருவரது வாழ்க்கையைத் தூற்றி, வாழ்ந்தாலும் தூற்றி, தாழ்ந்தாலும் துற்றி, தம் மன எரிச்சலைத் தணித்துக் கொள்வதோடல்லாமல் குற்றம் பலவற்றைச் செய்து குதுகலிப்பதும் நமக்குத் தெரியும்.அதனால்தான் குற்றம் பார்க்கில் சுற்றமில்லை உயர்வான இந்த உறவைத்தான், உடன் பிறந்தே கொல்லும் வியாதி என்று வருணித்தனர். பொறாமையும், புழுங்கிப் புறங்கூறும் பொல்லாத குணமும் எப்போது ஏற்படும்? ஒருவரது முன்னேற்றத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்கு மனப் புழுக்கம் ஏற்படுகிறபோதுதான் ஏற்படும். - - பெற முடியவில்லை. பொறுத்துக் கொள்ள முடிய வில்லை என்பதால்தான் அதைப் பொறாமை என்றனர். உள்புறம் ஏற்பட்ட உறுத்தல்தான் பகையாக மாறி, உற்றவரும் அறியா வண்ணம் புறம் கூறத் தூண்டிவிடுகிறது. அதனால் அதைப் பகச் சொல்லி என்றார் வள்ளுவர்.