பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 35 - தங்களை பின்னால் தள்ளி விட்டு, முன்னேறுகிற ஒருவரை, ஒரம் கட்டுவதுதான், சுற்றத்துக்குள்ள அரிய குணாதிசயமாகும். * . எல்லாச் சுற்றமும் அப்படியிருக்குமா என்றால்நூற்றில் ஒன்றுதான் நன்றாயிருக்கும். மற்றதெல்லாம், சுற்றிவந்து உயிரறுக்கும் கூட்டம்தான். இது வாழ்வில் வசதிபெற்று : உயர்ந்திருக்கிற எல்லா மனிதருக்குமே ஏற்பட்டிருக்கும் அனுபவம் ஆகும். : பொறாமை கொண்ட கேளிர் தம் சுய அறிவையும் சுகமான சிந்தனையையும் சிதைத்துவிட்டு, உயர்ந்தவரைப் - பற்றி அவதூறு கிளப்பியும் மனம் புண்படுவது போல் வதந்திகள் பலவற்றைக் கிளப்பிவிட்டு வம்பு செய்து துரத்தியும் பிரித்தும் அற்ப சந்தோஷம் காணுகிற அக்ரமத்தையே வள்ளுவர், பகச் சொல்லி கேளிர்ப் பிரிப்பர் என்றார். தன் உறவினர் ஒருவர், உயர்கிறார் என்பதை அறிந்து, மனத்தில் சந்தோஷப்பட்டு அவரிடம் உள்ள உறவை மேலும் மேலும் வளப்படுத்திக் கொள்ள முடியாத சுற்றமே, அவரைப் பிரித்துவிடுகிறது. உயர்ந்தவர் அதாவது நல்ல குணம் உள்ளவர்கள் தங்கள் சுற்றத்தைப் பிரித்து விடுவதில்லை. நூற்றில் ஒருவர் இப்படி இருப்பார்கள். ஆனால், பொறாமை கொண்ட சுற்றமே, பிரித்துவிடுகிறது அல்லவா சுற்றத்தாரிடம் எல்லோருமே இந்தச் சுகலாபங்களை அனுபவித்தே வருகின்றார்கள். இருந்தாலும், இதையும் மீறி உயர்வதுதான் நமக்குப் பெருமை. இந்தப் பெருமையும் ஒர் அரிய திறமைதானே!