பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா 6. பிறப்பும் சிறப்பும் மிகவும் சிந்தனைக்கும் சிக்கலுக்கும் உரிய ஒரு குறளை, தேர்ந்தெடுத்திருக்கிறேன். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். (482) பெருமை எனும் அதிகாரத்தில் வருகிற2வது பாடல் இது. 'எல்லா மக்களுக்கும் பொதுவாகிய பிறப்பியல் பு ஒக்குமே யெனினும், பெருமை சிறுமையெனப்பட்ட சிறப்பியல் புகளை, அவை செய்யுந் தொழில்களது வேறு பாட்டான் அமையும் என்று பரிமேலழகர் உரை எழுதியிருக்கிறார். ... " - - எல்லா மக்களுக்கும் பிறப்பு என்பது ஒரு தன்மையானதாகத்தான் இருக்கும். ஆனாலும் கூட, அவரவர் செய்கின்ற தொழில்களின் உயர்வு தாழ்வு என்ற வேறுபாடுகளின் சிறப்புத் தன்மைகள் பற்றி எழுதுகிறார். எல்லா மக்கள் உயிர்க்கும் பொதுவாகிய பிறப்பின் தன்மை ஒத்ததே யென்றாலும், பெருமை சிறுமை எனப்பட்ட சிறப்பியல்புகள் ஒவ்வா. ஏனெனில், அவை அவரவர் செய்யும் தொழில்களது வேறுபாட்டால் என்பதாம் என்று திருக்குறள் முனிசாமி எழுதுகிறார். எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒத்த தன்மையதே. அதுபோல், தொழில்களும் ஒத்தவையே. எனினும் அவற்றைச் செய்யும் செயல்நிலை வேறுபாட்டால் சிறப்பு ஒத்தவையாகா என்று மதுரை இளங்குமரனார் பொருள் கூறுகிறார். பிறப்பு ஒக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பு ஒவ்வா செய்தொழில் வேற்றுமையான் என்று எல்லோரும் குறளைப் பிரித்தார்கள். - * , - - = --- - -