பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

: 38 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா ஒத்த குலமும், ஒத்த ஒழுக்கமும் ஒத்த குணமும் ஒத்த ஆயுளும் கொண்ட ஆணும் பெண்ணும் சுற்றம் மகிழ்ந்து போற்றி வாழ்த்திட திருமணம்புரிந்து கொள்ளப் பிறக்கும் குழந்தைகள் (765). . . . . காளை மாட்டை அடக்கி, வில்லால் இலக்கம் எய்தி, பொருள் கொடுத்து, வலிந்து, ஒரு பெண்ணை மணந்து கொள்ளுதல் மற நிலை மணத்தில் பிறக்கும் குழந்தைகள். ஏறு தழுவல், இலக்கம் எய்தல், உறுபொருள் கொடுத்தல், வலிதிற் போடல் மாறுடைநிலையின் மறநிலை இன்பம் கற்பு நிலை மறந்து, தன் காமத்தையே நினைந்து அதிலே முனைந்து, சண்டாளத்தனம் என்று சமுதாயம் சுட்டிக் காட்டும் நிலையில் பிறந்த பிள்ளைகள். - . 1. கொண்டோர் பிழைத்துப் பெறுகிற மகன். அதாவது, கணவர் இருக்கும் பொழுதே, கள்ளக் காதலால் பிறக்கும் குழந்தைக்குக் குண்டகன் என்று பெயர். 2. விதவைபெற்ற மதலைக்குக் கோளகன் என்று பெயர். 3. கல்யாணம் செய்யாத கன்னிக்குப் பிறந்த மகனுக்கு கானினன் என்று பெயர். . . . , - - - 4. உயர்ந்த ஆணும், இழிந்த குலப்பெண்ணும் கூடிப்பிறந்த மகனுக்கு அதுலோமர் என்று பெயர். - - 5. உயர்ந்த குலத்துப் பிறந்த பெண்ணும், இழிந்த குல ஆணும் கூடிப் பிறந்த பிள்ளைக்கு பிரதிலோமர் என்று பெயர். 6. அதுலோமத்து ஆணும், பிரதிலோமப் பெண்ணும் கூடிப் பிறந்த பிள்ளைக்கு அந்தராளர் என்று பெயர். 7. அதுலோமப் பெண்ணும், பிரதிலோம ஆணும் கூடிப்பிற்ந்த பிள்ளைகளுக்கு விராத்தியர் என்று பெயர். இவ்வாறு தவறு என்றும், கவறு என்றும், பாபம் என்றும் o - சமுதாயத்தாரால் பேசப்படுகிற நிலையில், பிறக்கும் குழந்தைகள் உண்டானது மற்ற குழந்தைகள் போலத்தான் உருவாகி, பத்துத் திங்கள் இருந்து வளர்ந்து புறம் வருகிறது.