பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 41 7. துறவும் உறவும் நீத்தார் பெருமை என்னும் மூன்றாம் அதிகாரம். அதிலே வருகிற குறள் துறவின் நுண்மையைத் திரையில் தெரிகின்ற பேசும் படம் போல, தெளியத் காட்டுகிது. ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு. (21) பரிமேலழகர் இக்குறளுக்குத் தருகிற பொருள் வருமாறு: தமக்குரிய ஒழுக்கத்தின் கண்ணே நின்று துறந்தாரது பெருமையை, விழுமிய பொருள்கள் பலவற்றுள்ளும், இதுவே விழுமியதென விரும்பும் நூல்களது துணிவு சீரிய ஒழுக்கத்தில் நின்று துறந்தவர்களது பெருமையினை, மேலான பொருள்கள் எல்லாவற்றுள்ளும் மேலானதென்று விரும்புவது நூல்களினுடைய துணிவாகும் என்று திருக்குறளார் முனிசாமி உரை எழுதியிருக்கிறார். - - - சான்றோர்களின் சிறந்த நூல்கள் எல்லாம், துறந்தாரின் பெருமையையே, பெருமைகள் எல்லாவற்றுள்ளும் சிறந்த ஒன்றாகக் கூறும் என்று நாவலர் கூறுகிறார். - - ஒழுக்கத்தில் நிலைபெற்றுத் துறந்தவர் பெருமையே பெருமைக்குரியன பலவற்றுள்ளும் சிறந்தது என்பது உயர்ந்த நூல்களின் முடிவாகும் என்று மதுரை இளங்குமரனார் உரை எழுதுகின்றார். - ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து வேண்டும் பனுவல் துணிவு என்றே குறளைப் பதம் பிரித்து, அப்படியே பொருள் தந்திருக்கின்றார்கள் பலரும். - நீத்தார் என்றால் பற்றற்ற துறவோர். முனிவர், சித்தர் என்றும், துறந்தார் என்றும் முற்றுந் துறந்தார் என்றும் பொருள் கூறுவார்கள். r - - * , பெருமை என்றால் சிறப்பு என்று பொருள். முற்றுந் துறந்தவரின் பெருமையை, மேலானவற்றிலும்