பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 டாக்டர் எளப் நவராஜ் செல்லையா மேலானது என்பது நூலோர்களின் முடிவு என்று பொருள் கூறுவது. எல்லோருக்கும் தெரிந்த ஒரு பொருள்தான். ஆனால், நீத்தாரின் பெருமையைக் கூறவந்த வள்ளுவரும், இவ்வளவு எளிமையாகவோ,முற்றும் துறந்தவரின் பெருமையை விளக்கி சொல்கிறார்! - - நூல்களின் முடிந்த கொள்கை துறவிகளின் செயல்களைப் போற்றும் என்பது மிக மிக எளிய சாதாரண பொருளாகும். அதுவுமின்றி, ஒழுக்கத்து நீத்தார் என்னும் சொற். களைப்படிக்கும் போது ஒழுக்கத்திலிருந்து நீத்தவர்கள் என்றே, எவரும் உடனே தவறாகப் பொருள் கொண்டு விடுவதும், இயல்பாகவே நடந்து வருகிறது. - பாடல் அழகுக்காக, ஒழுக்கத்து என்று தொடங்கி, நீத்தார் பெருமை என்று தொடர்ந்து செல்கிறது. விழுப்பத்து, வேண்டும் என்று மேலும் தொடர்ந்து ஆனால், வள்ளுவர் எண்ணிப் பாடிய பொருள், அப்படி அமையவில்லையோ என்றும் எண்ண வேண்டியிருக்கிறது. - - - அவர் சொல்லவந்த கருத்தின் சூட்சுமம் இப்படித்தான் அமைந்திருக்க வேண்டும் - - . - நீத்தார் பெருமை என்பது பனுவல் துணிவுவிழுப்பத்து வேண்டும் ஒழுக்கத்து இருக்கிறது. - - - - இப்பொழுது குறளின் கொள்கை முழக்கமானது நன்கு ஒலிப்பது போலத் தெளிவாகிறதல்லவா! அதற்காகக் குறளின் ஒவ்வொரு சொல்லுக்கும் உரிய . உண்னத பொருள்களையும் பார்ப்போம். - " பனுவல் என்பதற்கு, நூல், புலமை, ஆராய்ச்சி, கல்வி என்று பலபொருள்கள் உண்டு. - துணிவு என்றால், தெளிவு, நோக்கம், முடிவு, கொள்கை, குறிக்கோள் என்று பல பொருட்கள் உண்டு. - - விழுப்பம் : ஆசை, சிறப்பு, நன்மை, மேன்மை என்றெல்லாம் அர்த்தங்கள் பல உண்டு. , ஒழுக்கம் : விதித்தன செய்தலும் விலக்கின ஒழித்தலும்