பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 45 இல்லறம் நீங்கி நிற்றல் மட்டும் துறவறம் அல்ல, துறவறம், அறவறம், இறவறம் என்று தம்மை உயர்த்திக் கொண்டு விடுகிறவரே, பெருமைக்குரியவர் ஆவார். - - செத்துத் திரியும் சித்தர்கள் என்று புகழ்வார்கள். அதாவது ஆங்காரம் மிக்க ஐம்பொறிகளை அடக்கி, அமைதியாக ஆனந்தமாகத் திரிகின்ற ஆண்மையை உலகினுக்குக் காட்டி உய்விக்கின்ற உத்தமர்கள் ஆவார்கள். - அதனால்தான் வள்ளுவரும், அடுத்த குறளிலேயே, துறந்தார் பெருமை துணைக் கூறின், இறந்தாரை எண்ணிக் கொண்டற்று என்று பாடுகிறார். - - - துறந்தவரின் பெருமை அளவினைக் கூற முற்படுகிற போது, இந்த வையத்தில் இறந்தார் போல் இருந்து, இயங்கி, எதையும் துரும்பாக எண்ணி, இறை வாழ்வு வாழ்பவரை எண்ணிக் கொள்ள வேண்டும் என்று உவமை காட்டுகிறார். . செத்துத் திரியும் சித்தர்போல் இறந்தாற்போல் மனத்தால், அடங்கி, அடக்கி வாழ்பவரின் அளவாக எண்ண வேண்டும். அப்படியானால், துறப்பவர்க்குரிய துன்பம் எவ்வளவு? மனப்பக்குவம் எவ்வளவு - அப்படி வாழ்ந்து காட்டிய நீத்தார்களின் பெருமையை, இன்றைய சாத்தான்கள் பலர்சந்தி சிரிக்க வைப்பதைப் பார்த்துச் சஞ்சலப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நாம் உயர்ந்ததையே நினைத்து, உயர்ந்த வாழ்வு வாழ வேண்டும்.