பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 47 -- ஒரு செயலில் ஒருவர் ஈடுபட்டால் , அம்முயற்சிக்கும் தமக்கும் புகழுண்டாக ஈடுபடுபவராக, அத்திறம் இல்லாதார், அதில் ஈடுபடாதிருத்தலே நல்லது' என்று மதுரை இளங்குமரனார் உரை எழுதியிருந்தார். ... " நானும் குறளைப் பலமுறை படித்துப் பார்த்தேன். வள்ளுவரின் குறளில் ஏதோ உள்ளுரை இருப்பது போல எனக்குத் தோன்றியது. - - உரை எழுதிய எல்லோரும், தோன்றின் என்ற சொல்லுக்குப் பொருள் தருகிறபோது தான் பிறழ்ந்து போயிருக்கின்றனர். - - தோன்றுதல் என்றால் பிறத்தல் என்று ஒரு பொருள் உண்டு. அது போலவே, அந்தச் சொல்லுக்கு உதித்தல், வெளிப்படல், நிலை கொள்ளுதல், விளங்குதல் என்றெல்லாம் பொருள்கள் உண்டு. - புகழொடு என்றால், அருஞ் செயலோடு, நல்ல வெற்றியோடு, ஏற்றத் தோடு, மேம்பாட்டோடு என்றும் பொருள்கள் உண்டு. ஒருவர், மனிதராக மட்டும் வாழ்ந்தால் போதாது. அவர் மகாமனிதராக, மாண்பு மிகுந்தவராக, அருஞ் செயல் ஆற்றியவராக, செயற்கரிய்வை செய்தவராக, பார்த்தவர்கள் நல்லெண்ணத்துடன் பாராட்டுகின்ற பண்பாளராக விளங்க வேண்டும் என்பதுதான் வள்ளுவரின் அவாவாகும். ஆகவே தான், ஒவ்வொரு மனிதரையும் பார்த்து அவர் குறிப்பிட்டுக் கூறுவதுபோல அர்த்தமுள்ள சொற்களால், இக்குறளைப் படைத்திருக்கிறார். - - - - மக்கள் கூடியிருக்கின்ற மன்றமாக இருந்தாலும், அறிவு. சான்ற அறிஞர்கள் அணிகொண்டிருக்கின்ற பெரும் அவையாக இருந்தாலும் நீ செல்லுகிறபோது, அதாவது உன் தோற்றம் அங்கே ஏற்படுகிற போது, மற்றவர்கள் புகழ்ந்து போற்றி வரவேற்பதுபோல நீ அங்கே தோன்ற வேண்டும். அதாவது