பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா புலவர் என்றால் அறிஞர், கலைஞர், கவிஞர், கூத்தர், புலமையோர். . ஞானிகள், முதுவர், மூத்தோர், மேலோர், விற்பன்னர், சிற்பியர் என்றெல்லாம் அர்த்தம். - ஆகவே, அவ்வுலகம் என்பது, மக்கள் கூடுகிற கலை அரங்கம், ஆடல் பாடல் நிகழ்கிற நாடக அரங்கம்,பொதுமக்கள் கூடுகிற கூட்டம். புலவர்கள் என்று புகழப்படுகிற பேரறிவாளர்கள், பெரியோர்கள் தோன்றுகின்ற பெரும் சபை. இந்த உலகத்தில் இடம்பெற வேண்டும் என்றால், புகழும் பெருமையும் மதிப்பும் மரியாதையும் பெற வேண்டும் என்றால், யாராயிருந்தாலும் அருளாளராக இருக்க வேண்டும். - அத்தகைய அருள் இருந்தால்தான் அவ்வுலகில் இடம் உண்டு. இருள் இருந்தால் அந்த எல்லைக்குள்ளே கூடச் செல்ல முடியாதல்லவா? - இப்போது நமக்குக் கிடைத்திருக்கும் புதிய பொருளைத் தொகுத்துப் பார்ப்போம். - i. - - பொருள் என்று போற்றப்படுகின்ற நல்ல உடல் இல்லாதவர்களுக்கு இந்த உலகமே இல்லை என்கிறபோது! வாழ்க்கை எங்கே கிடைத்துவிடப் போகிறது? - கற்றறிந்த சபையிலே இடமும் வரவேற்பும் கிடைக்க வேண்டும் என்றால், ஆன்றவிந்த அருளும் அறிவும் திருவும் அல்லவா இருக்க வேண்டும். - i நல்ல உடலிலே நல்ல மனம் என்பார்கள். துறவியர்க்கு நல்ல உடலும் அதனால் நல்ல மனமும் கிடைக்கும் என்று கூறுகிற அறிவுரை இல்லறத்தாருக்கும் பொருந்துமல்லவா! - சபையிலே புகழும், வாழ்க்கையிலே மகிழ்வும் பெற பொருளும் வேண்டும். அருளும் வேண்டும் என்றால் இப்படி அமைந்தால் தானே முடியும். அதைத்தான் வள்ளுவர் அழகாகப் பாடினார். . ." - -