பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 ... " டாக்டர் எஸ். நவராஜ் செல்லையா அறிவும் ஆற்றலும், நீதியும், நேர்மையும், நியாயமும், இரக்கமும், ஈகைத் தன்மையும் உடையவர்களாக இருந்து அரசர்க்கு உதவி செய்தால் நாடு நாடாக உயரும். மக்களும் மக்களாக வாழ்வர். வாழ்வும் வாழ்வாகச் செழிக்கும். இப்படி மக்களுக்கு வாழ்வதற்குரிய வழிவகைகளைச் சொல்லாத, வாழ்க்கை முறைகளை வகுத்துத் தராத, வழிகாட்டுகிற விதிமுறைகளைத் தொகுத்துத் தராத உலகுடன் அர்சன் ஆளுகிற போது அங்கே என்ன நடக்கும்? இரந்து உயிர் வாழ்தல் என்பது ஈனத்தனமானது என்றாலும், அது நடந்துதான் தீரும். ஏனென்றால், உடல் ஊனமுற்றவர்கள், குறைபாடுள்ளவர்கள், நோகும் நோயாளிகள், வலுவற்றவர்கள், இயல்பாகச் செயல்பட முடியாதவர்கள் எல்லாம் பிறரிடம் கேட்டோ, கெஞ்சியோ, குழைந்தோ, கூத்தாடியோதான் வாழ முடியும்; வயிற்றைக் கழுவ முடியும். இத்தகைய வாழ்க்கையே இரந்து உயிர்வாழும் நிலை. | - - இப்படிப்பட்டவர்கள் இரந்து, பிச்சை எடுத்துத் தங்கள் உடலிலிருந்து உயிர் பிரிந்து போகாமல் இருக்க வாழ்பவர்கள். இவர்களைக் காக்கத்தான் அறம் செய்யுங்கள் என்றனர் . ஐயமிட்டு உண் என்றனர்காக்கைக்கு உணவு படைப்பதுபோல, கையறு நிலையினருக்கும் உதவுங்கள் என்றனர். ஆனால், வள்ளுவர் பாடிய வரியைப் பாருங்கள். இரந்தும் உயிர் வாழ்தல் வேண்டின் என்றார். இங்கே உம் என்று ஒன்றைச்சேர்த்திருக்கிறார். நல்ல உடல் நலமுள்ளவர்கள் பலமும் வளமும் உள்ளவர்கள், அறிவுக் கூர்மையும் ஆற்றலும் நிறைந்தவர்கள், வாழ்வதற்காக அழைக்கின்ற வல்லமை வாய்ந்தவர்கள் ஆகிய குடி மக்களுக்கு அரசும் அரசின் பேராயமும் வழிகாட்டாவிட்டால் அவர்கள் வாழ்விழந்து போவார்களே! - -. - தொழில் செய்ய வாய்ப்பும் வசதியும் செய்து தராமல் சுயநலமாய் ஆட்சியினர் அதிகாரிகள் வாழ்ந்து கொண்டால்