பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் - 65 நாடு சுடுகாடாய்ப் போகுமே! - மக்கள் உடலால் வெறுமையாவர். பொருளால் வறுமை அடைவர். உணர்வால் வற்றிப் போவர். வாழ்வால் செத்துப் போவர். - - இப்படிப்பட்ட கொடிய நிலைக்கு நாட்டை ஆள்கிறவர் யாராயிருந்தாலும், அரசரை ஆற்றுப்படுத்தாத பதினெட்டு வகை அதிகாரிகளும் பாழ்பட்டுப் போவர் என்று வள்ளுவர் எச்சரிக்கிறார். நிலம் சூழ்ந்து நிலவிக் கிடக்கும் கடலுக்குப் பரவை என்று பெயர். பரந்துபட்ட கடலில் சதா அலைகள் தாமே புரண்டு புரண்டு, சீறி மடங்கி அழிந்தொழியும். - - அதுபோலவே, நன்கு திட்டமிடாத அதிகாரிகள், தேர்ச்சி பெறாத காவலர்கள், தீர்க்கமாகத் தங்கள் கடமையுணராத அறிஞர்கள், சான்றோர்கள், அத்தனைபேரும் பரந்து கெடுக என்றும், அதாவது உரவழிந்து, நிலைகுலைந்து நாசமாகுக என்பது போலவே வள்ளுவர் பாடுகிறார். - வள்ளுவர் சொல்ல வந்த சுவையான செய்தி: உயிர் வாழ்வதற்கு, உடல் வளர்ப்பதற்கு தொழில் வழிமுறைகளைத் தராமல் மக்களை மரியாதையோடு. வாழ் விக்க வகை செய்யாமல் உலகு இயற்றுகிறவர்கள் உருப்படாமல் ஒழிந்து போவார்கள். அதனால்தான் பரந்து, அலைந்து கெடுக, பாழ்பட்டுப் போது என்றார். தவறுக்கு அரசன் மட்டுமே காரணமல்ல. அவன் தன்னைச் சுற்றி வைத்துக் கொண்டிருக்கிற அதிதாரிகளும் வீரர்களும், காப்பாளர்களும் அறிஞர்களும் சான்றோர்களும் தான் காரணம் என்று நடைமுறை சாத்தியமான நல்ல என்ற கருத்தைக் கூறுகிறார். * - - பக்கத்தில் வஞ்சக நெஞ்சினரைத் துணையாக்கிக் கொண்டிருந்த தலைவர்கள் எல்லாம் தொலைந்து போன. கதையைத்தான் இந்தக்குறள் எடுத்துரைக்கிறது. துல்லியமாக விளக்குகிறது. ‘. . . . . . . . ."