பக்கம்:குறளுக்குப் புதிய பொருள்.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறளுக்குப் புதிய பொருள் 5 சொன்னார்கள். ஆனால், வள்ளுவரின் உள்ளம் எண்ணியதோ வேறு விதமாக இருந்தது. மழித்தல் என்றால் அழித்தல் என்று பொருள். நீட்டல் என்றால் பெரும் கொடை என்று பொருள். அந்தக் காலம் தொட்டு, இந்தக் காலம் வரை துறவி வேடம் பூண்ட தீய சக்திகள். தமக்குப்பிடித்தால் ஒவருக்கு வாரி வழங்குவதையும், தமக்குப் பிடிக்காவிட்டால் அவர்களை அழித்து விடுவதையூம் கொள்கையாகக் கொண்டு வாழ்ந்ததை வரலாறு விரித்து உரைக்கின்றது. அதற்கு உதாரணமாகப் பிரேமானந்த சாமியார், சந்திராசாமியார் போன்றோர் பலரைச் சான்றாகக் கூறலாம். இப்படிப் புகழ் மிக்க சில குறள்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு நண்பர்கள் பலர் என்னிடம் விளக்கம் கேட்ட பொழுது, நான் கூறிய புது விளக்கங்கள்தாம் இன்று இந்தப் புத்தக வடிவிலே உருவாக்கம் பெற்றிருக்கிறது. நான் கூறுகிற புதிய விளக்கங்கள் உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால் மறுப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற விருப்பம் இருந்தால் என்னிடம் நீங்கள் தொடர்பு கொண்டு விவாதிக்கலாம். புதிய விளக்கங்களைத் தருவதற்காக நான் அந்த புகழ் மிக்க குறட்பாக்களில் இருந்து எந்தச் சொல்லையும் சேர்க்கவில்லை. எந்தச் செயல்களையும் குறைக்கவுமில்லை மாற்றவுமில்லை. இருக்கும் சொல்ல்ைப் பிரித்துப் பார்த்திருக்கிறேன். அவ்வளவுதான் - - இப்படி ஆய்வு செய்து, கொண்டிருந்த என் முயற்சியைக்கண்டு தமிழறிஞர்கள் பலர் திருக்குறளுக்கு நீங்கள் புதுவுரை எழுதலாமே என்று உற்சாகம் தந்ததின் விளைவாக திருக்குறள் புதுவுரை என்ற நூல் தயாராகிக் கொண்டிருக்கிறது. அறத்துப்பால் முழுவதும் புதுவுரைப் பெற்று வருகிற இரண்டாயிரம் ஆண்டில் ஜனவரி திங்களில் வெளிவர இருக்கிறது என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நூலில் இடம் பெற்றுள்ள குறட்பாககளையும் இங்கே தந்துள்ளேன். - 1. உறங்குவதுபோலும்சாக்காடு உறங்கி